58,891 மசான் கார்கள் உலக அளவில் திரும்ப பெறப்படுகிறது

Written By:

போர்ஷே நிறுவனம் மசான் கார்களை சர்வதேச அளவில் திரும்ப பெறுகிறது.

சமீபகாலங்களில், ஏதாவது காரணங்களின் அடிப்படையில் கார்களை திரும்ப பெறும் போக்கு அதிகரித்து வருகின்றது. அந்த வரிசையில், போர்ஷே நிறுவனம் தங்களின் மசான் எஸ் மற்றும் மசான் டர்போ மாடல் கார்களை சர்வதேச அளவில் திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இப்படி திரும்ப பெறப்படும் மசான் மாடல் கார்களின் எண்ணிக்கை, 58,891 கார்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

கார்களை திரும்ப பெறும் இந்த பிரச்னை, இஞ்ஜினின் லோ பிரஷர் ஃப்யூவல் லைனில் பெட்ரோல் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, எரிபொருள் குழாயை ஆய்வு செய்வதற்காக, இந்த நடவடிக்கைகள் முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கபட்டு வருகின்றது என போர்ஷே தெரிவிக்கிறது. எரிபொருள் கசிவு இருக்கிறதா என்பதை, அங்கிகரிக்கப்பட்ட வர்க்‌ஷாப்களில் ஆய்வு செய்து, சரி செய்யபடும் என கூறபட்டுள்ளது.

Porsche Macan Models Recalled internationally

மசான் கார்களை திரும்ப பெறும் இந்த நடவடிக்கை, பெட்ரோல் ரக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். திரும்ப பெற உள்ள கார்களை பற்றிய தகவல்கள், டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கபடும்.

இந்தியாவில் போர்ஷே மசான் கார்களை, மசான் எஸ் டீசல் மற்றும் மசான் டர்போ என்ற இரு வடிவில் விற்பனை செய்து வருகின்றது. மசான் கார்கள்

குளறுபடியான லோ பிரஷர் ஃப்யூவல் லைன்களால் திரும்ப பெறபடுகிறது.

மசான் டர்போ 3.6 லிட்டர், வி6 டர்போ சார்ஜ்ட் மெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 400 பிஹெச்பி-யும், உச்சபட்சமாக 550 என் எம் டார்க் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த காரின் 4 சக்கரங்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. மசான் டர்போ சுமார் 1.26 கோடி ரூபாய் ஆன்-ரோட் (டெல்லி) விலையில் கிடைக்கின்றது.

English summary
Porsche Macan Models are recalled Globally. The latest recall news is that of Porsche, which is recalling the Macan S and the Macan Turbo models globally. The number of affected models are 58,881.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark