க்விட் அடிப்படையில் பல புதிய காம்பேக்ட் மாடல்கள்... ரெனோவின் அதிரடி திட்டம்!

Written By:

புதிய ரெனோ க்விட் கார் அடிப்படையில், 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான பல புதிய காம்பேக்ட் ரக கார் மாடல்களை அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளில் இந்திய கார் மார்க்கெட்டில் 5 சதவீத பங்களிப்பு என்ற விற்பனைக் கொள்கையுடன் செயல்பட்டு வரும் ரெனோ கார் நிறுவனம், பல தீவிரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பல புதிய பட்ஜெட் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையினரையும், வாடிக்கையாளர்களையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது ரெனோ க்விட் கார். இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மகிழ்ச்சிகரமான செய்தியாக, க்விட் அடிப்படையில் புதிய காம்பேக்ட் ரக மாடல்களை அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது.

ஹேட்ச்பேக் மாடல்

ஹேட்ச்பேக் மாடல்

ரெனோ க்விட் கார் மினி எஸ்யூவி பாடி ஸ்டைலில் வருவது தெரிந்ததே. இந்த நிலையில், ஓர் முழுமையான ஹேட்ச்பேக் டிசைனிலான மாடலையும் அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நேரடியாக மாருதி ஆல்ட்டோ 800 காருடன் மோதும்.

 மினி செடான்

மினி செடான்

இப்போது மாருதி டிசையர் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்க்கெட்டை ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட மாடல்கள் மெல்ல உடைக்கத் துவங்கியுள்ளன. இந்தநிலையில், ரெனோ க்விட் கார் அடிப்படையிலான புதிய காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

7 சீட்டர் மாடல்

7 சீட்டர் மாடல்

முழுமையான ஹேட்ச்பேக், மினி செடான் கார் தவிர்த்து, ரெனோ க்விட் அடிப்படையில் ஓர் எம்பிவி மாடலையும் உருவாக்கி அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தற்போது ரெனோ லாட்ஜி கார் இருந்தாலும், புதிய மாடல் விலை குறைவானதாக இருக்கும் என்பதோடு, இது 7 சீட்டர் மாடலாக இருக்கும்.

எஸ்யூவி

எஸ்யூவி

மேற்கண்ட மாடல்களை தவிர்த்து ரெனோ க்விட் அடிப்படையில், ஓர் எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மினி எஸ்யூவி 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். புதிய மஹிந்திரா கேயூவி100 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 
English summary
Renault Is Working On More Compact Car Models For India.
Story first published: Monday, September 14, 2015, 14:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark