ரெனாட் க்விட் கார் வாங்கனுமா? - 6 மாதங்கள் காத்திருக்கணும்!

Posted By:

பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் ரெனாட் க்விட் காருக்கான காத்திருப்பு காலம் ஆறு மாதங்கள் வரை நீண்டுவிட்டது.

சமீபத்தில் வெளியாகி, மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்ற கார்களில் ரெனாட் க்விட் கார் மிக முக்கியமானதாகும். ரெனாட் கார் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அசத்தலான அம்சங்கள் கொண்ட இந்த க்விட், ஈர்க்ககூடிய விலையிலும் கிடைக்கிறது. இதனால், க்விட் கார் மக்களிடம் உடனடி ஹிட்டாகிவிட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரெனாட் க்விட் 799 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் 53 பிஹெச்பி பவரையும், உச்சபட்சமாக 72 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்கு 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் ;

மைலேஜ் ;

ரெனாட் க்விட் கார், லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் மாடல் என்பதும் இந்த காருக்கான வரவேற்பை வெகுவாக கூட்டியிருக்கிறது. இது, 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.

பிற வசதிகள்;

பிற வசதிகள்;

ஏர்கண்டிஷன்

பவர் ஸ்டீயரிங்

ஆன் போர்ட் ட்ரிப் கம்ப்யூட்டர்

7 இன்ச் தொடுதிரை

மீடியோ நவ் நேவிகேஷன்

புளூடூத் வசதியுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம்

முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ்

முழுதும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல்

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

13 இன்ச் வீல்கள்

180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்

300 லிட்டர் பூட் ரூம்

இருக்கைகளை மடக்கினால், 1,115 லிட்டர் வரை கொள்ளளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்;

பாதுகாப்பு வசதிகள்;

டிரைவர்-சட் ஏர்பேக் [ஆப்ஷனல்]

சென்ட்ரல் லாக்கிங்

பார்க்கிங் பிரேக் வார்னிங் சிஸ்டம்

ஸ்டாண்டர்ட் மாடல்கள்;

=================

முன் சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்குகள்

ஹை மவுண்டட் ஸ்டாப் லேம்ப்

ஸ்பேர் வீல்

வார்னிங் டிரையாங்கிள்

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

ஃபியரி ரெட்

ஐஸ் கூல் ஒயிட்

மூன்லைட் சில்வர்

அவுட்பேக் பிரான்ஸ்

பிளானெட் க்ரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

வேரியண்ட்டுகள்;

வேரியண்ட்டுகள்;

ஸ்டான்டர்டு

ஆர்எக்ஸ்இ

ஆர்எக்ஸ் [ஓ] - ஆர்எக்ஸ்இ ஆப்ஷனல்

ஆர்எக்ஸ்எல்

ஆர்எக்ஸ்டி

ஆர்எக்ஸ்டி [ஓ] - ஆர்எக்ஸ்டி ஆப்ஷனல்

ஆகிய 6 வகையான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

விலை விபரம்;

விலை விபரம்;

ஸ்டான்டர்டு : ரூ. 2.57 லட்சம்

ஆர்எக்ஸ்இ : ரூ. 2.89 லட்சம்

ஆர்எக்ஸ்இ ஆப்ஷனல் : ரூ. 2.95 லட்சம்

ஆர்எக்ஸ்எல் : ரூ. 3.12 லட்சம்

ஆர்எக்ஸ்டி : ரூ. 3.44 லட்சம்

ஆர்எக்ஸ்டி ஆப்ஷனல் : ரூ.3.53 லட்சம்

இவை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள் ஆகும்.

க்விட் காருக்கு போட்டி;

க்விட் காருக்கு போட்டி;

தற்போது, ரெனாட் காருக்கு போட்டியாக சுசுகி ஆல்டோ 800, ஹூண்டாய் இயான் கார்கள் விளங்குகின்றன.

நல்ல வரவேற்பு;

நல்ல வரவேற்பு;

ரெனாட் க்விட் வெளியான ஒரு மாத காலத்திற்குள், இது வரை 25,000-க்கும் கூடுதலான புக்கிங்களை பெற்றுள்ளது. முன்பதிவின் அளவு நாளுக்கு நாள் கூடி கொண்டே தான் இருக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகிறது. பெருகிவரும் எதிர்பார்ப்பை தாங்க முடியாத நிலையில், இனி புக்கிங் செய்ய விரும்புபவர்கள் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

காத்திருக்கலாம்...

எப்படி பார்த்தாலும், 3 முதல் 4 லட்சங்கள் விலை கொண்ட கார்களில், அதிக அம்சங்கள் கொண்ட கார்களில், இந்த க்விட் கார் தனித்து நிற்கின்றது என்றே கூறே வேண்டும். இத்தகைய அம்சங்கள் நிறைந்து இருக்கும் க்விட் காருக்கு, 6 மாதங்களுக்கான காத்திருப்பு காலம் சகஜமான விஷயமாக தான் என தெரிகின்றது.

English summary
Renault Kwid Car comes with a Waiting period of 6 months. The Kwid priced attractively at a base price of 2.57 lakh Rupees Rex-showroom (Delhi) has attracted over 25000+ Booking in around a month's time, since its Launch.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark