சென்னையில் புதிய ரெனோ க்விட் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் - முழு விபரம்

Posted By:

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரெனோ கார் நிறுவனம் இந்தியாவுக்கான புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்துள்ளது. ரெனோ கார் நிறுவனத்தின் தலைவர் கார்ல் கோஸ்ன் இந்த காரை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரெனோ நிறுவனத்தின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு போட்டியான ரகத்தில் வரும் இந்த புதிய கார் ரெனோ கார் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ க்விட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அறிமுக விழாவிலிருந்து நேரடி படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த க்விட் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரெனோ- நிசான் கூட்டணியின் CMF பிளாட்ஃபார்மில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிரட்டலான பம்பர், கம்பீரமான க்ரில் அமைப்பு, வீல் ஆர்ச். பிளாஸ்டிக் கிளாடிங்குகள் போன்றவை எஸ்யூவி சாயலை வழங்குகிறது.

இடவசதி

இடவசதி

போட்டியாளர்களைவிட அதிக இடவசதி கொண்ட மாடலாக இது இருப்பதும், இதன் வசதிகளும் இதன் முக்கிய விஷயமாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படும். இந்த கார் 98 சதவீதம் உள்நாட்டு பாகங்களை கொண்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், இதில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என்று தெரிகிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்த புதிய ஹேட்ச்பேக் கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர, நேவிகேஷன் சிஸ்டம், 2 டின் ஆடியோ சிஸ்டம் போன்றவையும் இடம்பெறும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது ரெனோ க்விட்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

செப்டம்பர் முதல் நவம்பர் இடையில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னொரு முக்கிய தகவல்

ரெனோ க்விட் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே CMF பிளாட்ஃபார்மில் டட்சன் ரெடிகோ கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

English summary
Renault Kwid has been debuted today. This is the global unveiling of the French carmaker's entry level car. Renault managed to keep key specs and details as a top secret, although the internet had a lot of photos of the car being tested.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more