ரெனோ க்விட் காருக்கு குவியும் முன்பதிவு... இமாலய எண்ணிக்கையை கடந்தது!!

Written By:

ரெனோ க்விட் காரின் முன்பதிவு 25,000 என்ற இமாலய எண்ணிக்கையை கடந்திருக்கிறது. சற்றுமுன் ரெனோ கார் நிறுவனம் அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறிய கார் மார்க்கெட்டில் ரெனோ க்விட் நிச்சயம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் வாய்ப்புள்ளது என்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே கூறியிருந்தது. அதனை இந்த எண்ணிக்கை உறுதி செய்திருக்கிறது.

Renault KWID Bookings
 

எஸ்யூவி போன்ற தோற்றம், அதிக மைலேஜ், மிகச்சரியான விலையில் வந்திருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ரூ.3,000 கோடியை தண்ணீராய் வாரி இறைத்து இந்த பட்ஜெட் கார் மாடலை ரெனோ நம்பிக்கையுடன் உருவாக்கியது.

அந்த நம்பிக்கை இப்போது வீண் போக வில்லை. மேலும், 50,000 கிமீ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும் வலு சேர்த்தது. இந்த நிலையில், சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையையும் விரைவாக விரிவாக்கம் செய்ய இருப்பதாக ரெனோ அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போது 180 டீலர்ஷிப்புகளுடன் இயங்கி வரும் ரெனோ கார் நிறுவனம், இந்த காலாண்டிற்குள் டீலர்ஷிப் எண்ணிக்கையை 205 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ரெனோ- நிசான் கூட்டணியின் ஆலையில்தான் புதிய ரெனோ க்விட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெனோ க்விட் காரை அலசும் விமர்சன கட்டுரை

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

English summary
Renault India, one of the fastest growing automotive companies in India has received an overwhelming response for its much awaited global hatchback, ‘Renault KWID’. This Attractive and Innovative car has set a new benchmark in the Indian automotive context. The Renault KWID has already achieved a major milestone by crossing 25,000 booking since its launch announcement.
Story first published: Tuesday, October 6, 2015, 18:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark