ரூ.2.56 லட்சம் என்ற நம்ப முடியாத விலையில் ரெனோ க்விட் அறிமுகம்!

Posted By:

யாருமே எதிர்பார்க்காத ஆரம்ப விலையில் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான சாய்ஸாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரெனோ கார் என்ற சிறப்புடன் வந்திருக்கும் இந்த புதிய பட்ஜெட் காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

ஸ்டான்டர்டு, ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ் [ஓ], ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்டி [ஓ] ஆகிய 6 வகையான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ க்விட் காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 799சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரகத்தில் இந்த கார்தான் சிறப்பான மைலேஜ் தரும் மாடலாக மாறியிருக்கிறது. 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

வசதிகள்

வசதிகள்

  • ஏர்கண்டிஷன்
  • புளூடூத் வசதியுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம்
  • முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ்
  • பவர் ஸ்டீயரிங்
  • மீடியோ நவ் நேவிகேஷன்
  • 7 இன்ச் தொடுதிரை
  • முழுதும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல்
  • கீ - லெஸ் என்ட்ரி
முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

13 இன்ச் வீல்கள்

180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்

300 லிட்டர் பூட் ரூம், இருக்கைகளை மடக்கி 1,115 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரிக்கலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஏர்பேக் [ஆப்ஷனல்]

சென்ட்ரல் லாக்கிங்

பார்க்கிங் பிரேக் வார்னிங் சிஸ்டம்

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஃபியரி ரெட், ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், அவுட்பேக் பிரான்ஸ் மற்றும் பிளானெட் க்ரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

ஸ்டான்டர்டு: ரூ.2.56 லட்சம்

ஆர்எக்ஸ்இ: ரூ.2.89 லட்சம்

ஆர்எக்ஸ்இ ஆப்ஷனல்: ரூ.2.95 லட்சம்

ஆர்எக்ஸ்எல்: ரூ.3.12 லட்சம்

ஆர்எக்ஸ்டி: ரூ.3.44 லட்சம்

ஆர்எக்ஸ்டி ஆப்ஷனல்: ரூ.3.53 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

குறைவான பராமரிப்பு செலவு

குறைவான பராமரிப்பு செலவு

மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட 19 சதவீதம் வரை குறைவன பராமரிப்பு செலவீனம் கொண்ட காராக ரெனோ க்விட் தெரிவித்துள்ளது ரெனோ கார் நிறுவனம்.

 
English summary
The Renault Kwid has been launched in India today for a starting price of INR 2.56 lakh .

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark