மைலேஜ், இடவசதி என எல்லாவற்றிலும் முதன்மை... ரெனோ க்விட் காரின் சிறப்புகள்!

Written By:

ரெனோ க்விட் காரின் தொழில்நுட்ப ரீதியிலான சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்களைவிட பல விஷயங்களில் ரெனோ க்விட் கார் மிகச்சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

எனவே, இந்த கார் வெற்றி பெறுவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன. அந்த புதிய தொழில்நுட்ப விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இடவசதி

இடவசதி

மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் போன்ற விலை அடிப்படையிலான போட்டியாளர்களை ஒப்பிடும்போது, வடிவத்தில் பெரிய கார் ரெனோ க்விட் கார். மாருதி ஆல்ட்டோ 3,39 மீட்டர் நீளமும், ஹூண்டாய் இயான் கார் 3.49 மீட்டர் நீளமும் கொண்டவை. ஆனால், ரெனோ க்விட் கார் 3.68 மீட்டர் நீளம் கொண்டது. இதன் காரணமாக மிக அதிக வீல் பேஸ் கொண்டதாக இருப்பதால், உட்புறத்தில் போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிகச் சிறப்பான இடவசதியை வழங்கும். இடவசதியில் முதன்மை பெற்ற மாடலாக இருக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

பெரும்பாலும் குட்டிக் கார்களில் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி குறித்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க முடியாது. மாருதி ஆல்ட்டோ 800 கார் 177 லிட்டர் பூட்ரூம் இடவசதியையும், ஹூண்டாய் இயான் கார் 215 லிட்டர் பூட்ரூம் கொள்ளளவையும் கொண்டவை. ஆனால், ரெனோ க்விட் கார் 300 லிட்டர் பூட்ரூம் கொள்ளளவு கொண்டதாக வருகிறது. இதனால், இந்த செக்மென்ட்டிலேயே அதிக பூட்ரூம் கொள்ளளவு கொண்ட கார் மாடல் ரெனோ க்விட்.

வசதிகளிலும்...

வசதிகளிலும்...

ஆரம்ப நிலை கார் செக்மென்ட்டில் பல நவீன வசதிகளை அளிக்கும் மாடலாகவும் இருக்கும். அதாவது, இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக, இந்த கார்தான் டச்ஸ்கிரீன் மீடியா - நேவிகேஷன் சிஸ்டத்துடன் வருகிறது. பியானோ பிளாக் இன்டிரியர் கொண்ட சென்டர் கன்சோல், முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் போன்றவையும் இதனை முதன்மைபடுத்துகிறது. பட்ஜெட் கார்களில் இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்ற வாடிக்கையாளர்களுக்கான மனக்கட்டுப்பாட்டை உடைக்க இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

மைலேஜிலும் இந்த கார்தான் நம்பர்-1 ஆக இருக்கப் போகிறது. ஆம், இந்த கார் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. போட்டியாளர்களான மாருதி ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜையும், ஹூண்டாய் இயான் 21.1 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ- நிசான் நிறுவனத்தின் சென்னை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்ட புதிய 3 சிலிண்டர் 800சிசி பெட்ரோல் எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 57 பிஎச்பி பவரையும், 74 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாகஸ் கொண்டதாக வருகிறது. ஆனால், மாருதி ஆல்ட்டோ 800 காரில் இருக்கும் 48 பிஎச்பி பவரையும், ஹூண்டாய் இயான் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 55 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும்.

மற்றொரு எஞ்சின்

மற்றொரு எஞ்சின்

மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் ஹூண்டாய் இயான் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல்களுக்கு போட்டியாக, ரெனோ க்விட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் பின்னர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், ஒரு தகவலாக இந்த கார் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கொண்டு வருவதற்கும் ரெனோ முடிவு செய்து வைத்துள்ளது.

விலை

விலை

சமீபத்தில் வர்த்தக இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி, புதிய ரெனோ க்விட் காரை ரூ.3 லட்சம் முதல் 4 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன்மூலமாக, ஆரம்ப நிலை மாடல்கள் ரூ.3 லட்சத்தையொட்டியும், டாப் வேரியண்ட் என்று சொல்லப்படுகின்ற உயர்வகை மாடல் ரூ.4 லட்சத்தையொட்டியதாகவும் இருக்கும். எனவே, மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்களுக்கு இந்த புதிய ரெனோ க்விட் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு

முன்பதிவு

இந்த மாதத்திலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ரெனோ க்விட் காருக்கு சில ரெனோ டீலர்களில் ரகசிய முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ரூ.25,000 வரை முன்பணம் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்கின்றனர். மினி டஸ்ட்டராக வர்ணிக்கப்படுவதால், இந்த காருக்கு எஸ்யூவி பிரியர்கள் சிலர் முன்பதிவு செய்து வருவதாக தெரிகிறது.

 
English summary
Renault KWID Technical Details Surfaced Online.
Story first published: Friday, September 4, 2015, 8:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark