ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் ஸ்டெப்வே மாடல் விபரம்!

Written By:

ரெனோ லாட்ஜி காரின் புதிய டாப் வேரியண்ட் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே என்று அழைக்கப்படும் இந்த புதிய மாடலில் தோற்றத்தில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது.

110பிஎஸ் மாடலில் மட்டுமே இந்த புதிய ஸ்டெப்வே மாடல் கிடைக்கும். சாதாரண மாடலைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடல் விரைவில் டீலர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய ஸ்டெப்வே மாடல் 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடலில் கிடைக்கும். ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட்டின் வசதிகள்தான் இந்த வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருக்கும்.

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

ஸ்டெப்வே மாடலில் வெளிப்புறத்தில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரண மாடலைவிட புதிய க்ரில் அமைப்பு, பிளாஸ்டிக் கிளாடிங்குகள், ஸ்கிட் பிளேட் போன்றவை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. அலாய் வீல் டிசைன் ஒன்றாக இருந்தாலும், கன் மெட்டல் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

110 பிஎஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் இருக்கும் 1.5 கே9கே டீசல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் லிட்டருக்கு 19.98 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது.

விலை

விலை

தற்போது விற்பனையில் இருக்கும் ரெனோ லாட்ஜி ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட்டை விட ரூ.60,000 கூடுதலான விலையில், இந்த புதிய லாட்ஜி ஸ்டெப்வே மாடல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 
English summary
Renault had christened its first MPV in India as ‘Lodgy', which was advertised and promoted as the ‘Most Lodgycal Vehicle For Indians'. They had promised to launch a more premium version called Stepway.
Story first published: Tuesday, June 16, 2015, 10:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark