நாய்களுக்காக ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கிய பிரத்யேக கார் மாடல்!

Written By:

நாய்கள் சொகுசாக பயணிப்பதற்கான பிரத்யேக கார் கான்செப்ட் ஒன்றை ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கி இருக்கிறது.

ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் இந்த புதிய கார் கான்செப்ட் வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டுள்ளது. நாய்கள் சொகுசாக பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கான்செப்ட் மாடலின் படங்கள், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைனர்

டிசைனர்

லண்டனை சேர்ந்த நீல்ஸ் வான் ரோய்ஜ் என்ற டிசைனர்தான் இந்த கார் கான்செப்ட் மாடலை டிசைன் செய்துள்ளார்.

இடவசதி

இடவசதி

காரின் பின்புறம் முழுவதும் நாய் சவுகரியமாக செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீ ஃபாப்

கீ ஃபாப்

நாய் கழுத்தில் இருக்கும் பட்டையில் ஒரு சிறிய சிப் கொடுக்கப்பட்டிருக்கும். நாய் காருக்கு அருகில் வரும்போது காரின் பின்புற கதவு தானியங்கி முறையில் திறந்து மூடிக்கொள்ளும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் மற்றொருவர் அமர்ந்து செல்லலாம். பின்புற இடவசதி முழுவதும் நாய்க்காக ஒதுக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

உயர்தர பாகங்கள்

உயர்தர பாகங்கள்

பின்புறத்தில் நாய் பயணிப்பதற்கான இடவசதி உயர்தர பாகங்கள் மற்றும் தரைவிரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

 
English summary
Every dog has his day! That's what comes to mind after what Rolls-Royce have decided to take along with them to the 2015 Geneva Motor Show. Luxury carmaker Rolls-Royce is taking along a shooting brake concept, designed exclusively for dogs.
Story first published: Thursday, February 19, 2015, 11:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark