ரோல்ஸ்ராய்ஸ் கஸ்டமைஸ் வல்லமையின் உச்சம்.. மெய்மறந்து போவது நிச்சயம்!

Written By:

தனது கார் கஸ்டமைஸ் திறமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஃபான்டம் II காரில் தனது கைத்திறனை காட்டி அசத்தியிருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். ரோல்ஸ்ராய்ஸ் செரினிட்டி என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த அசத்தலான கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

வரும் 15ந் தேதி வரை காட்சிக்கு இருக்கும் இந்த காரின் இன்டிரியர் மெய்மறக்கச் செய்யும் என்றால் மிகையில்லை. கூடுதல் தகவல்களுடன், ரோல்ஸ்ராய்ஸ் செரினிட்டி காரின் படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறோம்.

ரோல்ஸ்ராய்ஸ் சிறப்பு பிரிவு

ரோல்ஸ்ராய்ஸ் சிறப்பு பிரிவு

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை கஸ்டமைஸ் செய்து தரும் விசேஷ பிரிவுதான் இந்த காரின் இன்டிரியரை டிசைன் செய்திருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்யும் 85 சதவீத கார்கள் இந்த விசேஷ பிரிவின் கைவண்ணத்தில்தான் அலங்காரம் செய்து அனுப்பப்படுகிறது.

சாந்தம்

சாந்தம்

செரினிட்டி என்றால் சாந்தம் என்பது பொருளாகிறது. இந்த காரில் உள்ளே அமர்ந்து பயணிக்கும்போது நிச்சயம் சாந்தமான உணர்வு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது.

சீனப் பட்டு

சீனப் பட்டு

சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்ரக பட்டுத் துணியால் இந்த காரின் இன்டிரியர் வேயப்பட்டுள்ளது. 33 மீட்டர் நீள பட்டுத் துணியில் பூக்களை வரைந்து அழகை கூட்டியிருக்கின்றனர்.

மலபார் தேக்கு

மலபார் தேக்கு

இந்த காரின் உள்ள சீனப்பட்டுக்கு இணையாக அலங்காரத்தை தருவது மரத்தகடுகளால் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள். டேஷ்போர்டு, கதவுகளில் மலபார் தேக்கின் மகிமையை பாருங்கள்.

விசேஷ பெயிண்ட்

விசேஷ பெயிண்ட்

இதுவரை பயன்படுத்தாத விசேஷ பெயிண்ட் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்டிரியருக்கு ஒத்துப்போகும் வகையிலான இந்த பெயிண்ட் கொண்ட இந்த காரை பாலிஷ் செய்வதற்கு 12 மணி நேரம் பிடித்ததாம்.

இளம் டிசைனர்கள்

இளம் டிசைனர்கள்

செரிக்கா, மெச்செலி என்ற இரண்டு இளம் டிசைனர்கள் இந்த காரின் இன்டிரியர் வடிவமைப்பில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்தக் காலத்தில் அரசர்களை சுமந்து சென்ற வண்டிகளில் பயன்படுத்தப்பட்ட சொகுசு அம்சங்கள் மற்றும் அலங்காரங்களை மனதில் வைத்து இந்த இன்டிரியர் டிசைனை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 0 - 96 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்ட இந்த கார் மணிக்கு 249 கிமீ வேகம் வரை எட்டக்கூடியது.

விற்பனை

விற்பனை

இந்த காருக்கு ஒரு கோடீஸ்வரர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த காரை வாங்குவதற்கு மெனக்கெட தேவையில்லை என்று கேட்டுக்கொள்கிறோம்.

உழைப்பு

உழைப்பு

இந்த காரை 600 மணி நேர மனித உழைப்பில் உருவாக்கியிருப்பதாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விலை

விலை

ரோல்ஸ்ராய்ஸ் செரினிட்டி கார் ஒரு மில்லியன் பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்திய மதிப்பில் 9.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Rolls Royce is the ultimate experience in luxury travelling, now they have decided to make their customer experience even more luxurious. Now at the 2015 Geneva Motor Show the British luxury car maker has revealed its Serenity model.
Story first published: Friday, March 6, 2015, 16:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark