வரும் 15ந் தேதி டெல்லியில் பஸ் கண்காட்சி துவங்குகிறது!

Written By:

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் பஸ் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான 4வது சிறப்பு கண்காட்சிக்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 15ந் தேதி முதல் 17ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது. கனரக வாகனங்களுக்கான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி நடக்க இருக்கிறது.

Tata Hybrid Bus
 

நகரத்தில் இயக்கப்படும் பஸ் மாடல்கள், சொகுசு பஸ் மாடல்கள், பள்ளிக்கூட பயன்பாட்டிற்கான பஸ் மாடல்கள், ஹைபிரிட் பஸ்கள், இலகு மற்றும் கனரக வாகனங்கள், பிக்கப் டிரக்குகள், பயணிகள் வேன்கள், எஸ்யூவி, எம்யூவி ரக வாகனங்கள், ஆம்புலன்ஸ், கஸ்டமைஸ் வாகனங்கள் போன்றவை இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இதுதவிர, உதிரிபாக தயாரிப்பாளர்கள், டயர் தயாரிப்பு நிறுவனங்கள், பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. நிதி நிறுவனங்கள், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் தங்களது திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை வழங்கும்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் இந்த கண்காட்சியை சியாம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

English summary

 Society of Indian Automobile Manufacturers (SIAM) is organising the 4th Bus & Special Vehicle Show 2015 at India Expo Mart, Greater Noida, Delhi - NCR, India, from 15 - 17 January 2015 with support from Ministry of Heavy Industries and Public Enterprises, Government of India and Ministry of Road Transport & Highways, Government of India and Association of State Road Transport Undertakings (ASRTU).
Story first published: Tuesday, January 13, 2015, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark