சக்திவாய்ந்த புதிய ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் 230 மாடல் அறிமுகம்!

Written By:

சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பிரத்யேக பாடி கிட் பொருத்தப்பட்ட புதிய ஸ்கோடா ஆக்டாவியா காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய ஆக்டாவியா ஆர்எஸ் 230 என்ற பெயரில் பார்வைக்கு வருகிறது. ஆக்டாவியா ஆர்எஸ் காரைவிட இந்த புதிய ஆக்டாவியா ஆர்எஸ் 230 காரின் எஞ்சின் 10 எச்பி கூடுதல் சக்திகொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

Skoda Octavia RS 230
 

அதாவது தற்போது இந்த காரின் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 230 எச்பி பவரை அளிக்கும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லத்தக்க கட்டமைப்பு கொண்டதாக வருகிறது.

இந்த காரில் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் முன்புற ஆக்சிலுக்கான டிஃபரன்ஷியல் லாக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்டாவியா பிராண்டில் அதிவேக கார் மாடலாகவும் இதனை குறிப்பிடுகின்றனர். இதுதவிர, இதன் பிரத்யேக பாடி கிட் இந்த காரின் தோற்றத்தை சிறப்பாக எடுத்தியம்புகிறது.

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் இந்த புதிய ஆக்டாவியா ஆர்எஸ் 230 ஸ்பெஷல் எடிசன் மாடல், ஐரோப்பிய நாடுகளில் ஜூன் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Skoda has introduced the Octavia RS 230 special edition which will showcase at the Geneva Motor Show next month.
Story first published: Saturday, February 21, 2015, 14:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark