ஸ்கோடா ஆக்டாவியா காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்!

Written By:

கூடுதல் வசதிகளுடன் ஸ்கோடா ஆக்டாவியா காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் என்ற பெயரில் இந்த புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கோடா ஆக்டாவியா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த புதிய டாப் வேரியண்ட் கிடைக்கும்.

Skoda Octavia
 

இந்த புதிய டாப் வேரியண்ட்டில் சாவி இல்லாமல் உள் நுழையும் கீ லெஸ் என்ட்ரி வசதி, எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ரியர் கேமரா, ஸ்மார்ட்லிங்க் மொபைல் கனெக்ட்டிவிட்டி, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஆக்டாவியா டாப் வேரியண்ட்டில் 8 ஏர்பேக்குகள் கொண்டதாக இருக்கிறது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கான பெயிண்ட் வாரண்டி, இரண்டு ஆண்டுகளுக்கான எஞ்சின் மற்றும் ஸ்பேர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் ரூ.19.80 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Octavia will get an all-new ‘Style Plus' variant for Indian market prior to the festive season. Skoda has decided to price this special model at INR 19,80,000 ex-showroom, Delhi.
Story first published: Saturday, September 12, 2015, 9:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark