ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி சலுகைகள் - விபரம்

Posted By:

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தை தாங்கி பிடித்திருக்கும் ஒரே மாடல் ரேபிட் கார்தான்.

சிறப்பான மாடல் என்ற பெயரை எடுத்தாலும், ஸ்கோடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவையை காரணம் காட்டி, வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

 

இந்த நிலையில், ஸ்கோடா ரேபிட் கார் விற்பனையை அதிகரிப்பதற்கு மாதாமாதம் தொடர்ந்து சிறப்பு சலுகைகளை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிவித்து வருகிறது.

இந்த மாதத்திற்கான சலுகை விபரங்களை ஸ்கோடா வெளியிட்டிருக்கிறது. அதில், மிக குறைவான 7.99 வட்டி வீதத்திலான கடன் திட்டத்தில் ஸ்கோடா ரேபிட் காரை பெறுவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மேலும், சிறப்பு சலுகைகள் கொண்ட 4 ஆண்டுகளுக்கான பராமரிப்பு திட்டம், கூடுதல் வாரண்டி காலம், அவசர சாலை உதவி திட்டம் போன்றவற்றை தற்போது வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

English summary
Skoda is offering attractive finance scheme for its Rapid sedan. Now customers can avail loan from Volkswagen Finance India Pvt Ltd at just 7.99 percent interest rate. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark