ஏப்ரல் 15ல் விற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் டிசி அவந்தி - முழு விபரம்!

வரும் 15ந் தேதி இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி அவந்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே அல்லது அதற்கு மறுநாள் இந்த காருக்கான டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

முழுக்க முழுக்க இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ற வகையில், வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் பற்றிய முக்கிய செய்திகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கனவுத் திட்டம்

கனவுத் திட்டம்

கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் புகழ்பெற்ற டிசி டிசைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல ஆட்டோமொபைல் டிசைன் எஞ்சினியருமான திலீப் சாப்ரியாவின் கனவு திட்டத்தில் உருவான இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்.

அமிதாப் அறிமுகம் செய்த மாடல்

அமிதாப் அறிமுகம் செய்த மாடல்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக இந்த காரின் கான்செப்ட் மாடலை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் தயாரிப்பு நிலை அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவம்

வடிவம்

இந்த கார் 4,550மிமீ நீளமும், 1,965மிமீ அகலமும், 1,200மிமீ உயரமும் கொண்டது. 2,700மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

கிரவுண்ட் கிளிரயன்ஸ்

இது இந்தியாவிலேயே, இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்றதாக, உருவாக்கப்பட்டிருப்பதால், சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற ஸ்போர்ட்ஸ் கார் மாடல்கள் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவு என்பதால் இந்திய சாலைகளில் இயக்கும்போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த கார் 170மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் இருப்பதால் வேகத்தடைகளை கண்டு மிரள வேண்டியிருக்காது.

உறுதிமிக்க சேஸீ

உறுதிமிக்க சேஸீ

சக்திவாய்ந்த இந்த ஸ்போர்ட்ஸ் காரை ட்யூபியூலர் ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைத்துள்ளனர். ரோல்கேஜும் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் பாதுகாப்பு. கார்பன் ஃபைபர் கலவை சேர்க்கப்பட்ட பாலிமர் பாடி கொண்டது. இந்த கார் 1,562 கிலோ எடை கொண்டது.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

பை ஸினான் ஹெட்லைட்டுகள், டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.

 சக்கரங்கள்

சக்கரங்கள்

இந்த காரின் முன்சக்கரத்தில் 255/35 அளவுடைய டயர்களும், பின்புறத்தில் 295/30 அளவுடைய டயர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 20 இன்ச் அளவுடைய ரிம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏபிஎஸ்

ஏபிஎஸ்

கான்டினென்டல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பச்சை, சந்தனம், சிவப்பு உள்பட 10 விதமான வண்ணங்களில் கிடைக்கும். இதுவும் தேர்ந்தெடுப்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

டிசி அவந்தி காரின் நடுவில் எஞ்சின் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடையது. இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் கடந்துவிடும்.

முதல் லாட் காலி

முதல் லாட் காலி

முதல் லாட்டில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 500 கார்களுக்கும் முன்பதிவு முடிந்துபோய்விட்டதாம். இப்போது முன்பதிவு செய்ய நினைத்தால் அடுத்த லாட்டில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் காருக்கு மட்டுமே ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டும்.

விலை

விலை

முதல் லாட்டில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 500 கார்களும் ரூ.34.93 லட்சம் எக்ஸ்ஷோரும் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள டிசி அவந்தி கார்கள் ரூ.38 லட்சம் முதல் ரூ.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

அவந்தி பிராண்டில் மொத்தம் 4,000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்பிறகு புதிய மாடலை அறிமுகம் செய்ய டிசி திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
DC Design company is all set to launch Avanti sports car on 15th this month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X