மாருதியின் புதிய எஸ்யூவியின் பெயருடன் சேர்த்து கசிந்த 7 சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

மாருதியிடமிருந்து மூன்று புதிய எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது பற்றி ஏற்கனவே தகவல்களை வெளியிட்டிருந்தோம். அதில், இரண்டு புதிய எஸ்யூவி மாடல்கள் பற்றி விபரம் தெரிந்துவிட்டது. மூன்றாவது எஸ்யூவி பற்றி இன்னும் உறுதியானத் தகவல் இல்லை.

இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் மாருதியின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரத்துடன் சேர்த்து இன்னும் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தித்தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

01. நாமகரணம்

01. நாமகரணம்

மாருதியின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா[Vitara Brezza] என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்பானிய மொழியில் பிரெஸ்ஸா என்பது Breeze என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரானது. அதாகப்பட்டது, தென்றல் என பொருள்படுகிறது. இந்த பெயரை மாருதி நிறுவனம் பதிவு செய்துவிட்டதாம். தற்போது இந்த எஸ்யூவி மாடல் YBA என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

02. வடிவமைப்பு

02. வடிவமைப்பு

சுஸுகி நிறுவனத்தின் ஐவி-4 மாதிரி எஸ்யூவி மாடல் மற்றும் புதிய தலைமுறை சுஸுகி விட்டாரா எஸ்யூவியின் வடிவமைப்பு தாத்பரியங்களின் அடிப்படையில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை வடிவமைத்துள்ளனர். எனவே, தோற்றத்தில் விட்டாரா எஸ்யூவியின் சாயல் அதிகமிருக்கும் என்பதுடன் இதனை மினி விட்டாரா எஸ்யூவியாக கூற முடியும்.

03. வேரியண்ட் விபரம்

03. வேரியண்ட் விபரம்

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி எல், வி, வி+, இசட் மற்றும் இசட்+ ஆகிய வேரியண்ட்டுகளில் வருகிறது.

04. எஞ்சின் விபரம்

04. எஞ்சின் விபரம்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

05. ஏஎம்டி கியர்பாக்ஸ்

05. ஏஎம்டி கியர்பாக்ஸ்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் டீசல் மாடல் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.

 06. முக்கிய வசதிகள்

06. முக்கிய வசதிகள்

சாவியை பயன்படுத்தாமல், பொத்தானை அழுத்தி காரை ஸ்டார்ட் செய்யும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி. இதற்கு பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும். இதே சாவி மூலம் கார் கதவுகளை எளிதாக திறந்து மூட உதவும் கீ லெஸ் என்ட்ரி. பின்புறத்தை பார்த்து காரை நகர்த்த உதவும் ரியர் பார்க்கிங் கேமரா, பிரேக் பிடிக்கும்போது சக்கரங்களுக்குள் பிரேக் ஷூ பூட்டாதவாறு தவிர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், உயிர் காக்கும் காற்றுப்பைகள் உள்ளிட்ட முக்கிய வசதிகளை இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கொண்டிருக்கும்.

 07. எதிர்பார்க்கும் விலை

07. எதிர்பார்க்கும் விலை

ரூ.7.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான டெல்லி ஆன்ரோடு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Here are given 7 important details leaked along with Maruti's new suv's name.
Story first published: Saturday, March 28, 2015, 12:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark