மாருதி பலேனோ காரின் புதிய படங்கள் மற்றும் கூடுதல் விஷயங்கள்!

Written By:

அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி பலேனோ கார் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

மாருதியின் முதல் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக வருவதுடன், பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்க இருக்கிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ கார் குறித்த சில முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மேட் இன் இந்தியா கார்

மேட் இன் இந்தியா கார்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி பலேனோ கார் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் 100க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் தாயகமான ஜப்பானிற்குகூட இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதுதவிர்த்து, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளிலும் மேட் இன் இந்தியா பலேனோ கார்தான் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

 முதலீடு

முதலீடு

மாருதி பலேனோ கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தம் புதிய கார் மாடலை ரூ.1,060 கோடி முதலீட்டில் மாருதி உருவாக்கியிருக்கிறது.

எடை குறைவு

எடை குறைவு

தற்போது விற்பனையில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரை விட 100 கிலோ எடை குறைவானது பலேனோ. அதேசமயம், 10 சதவீதம் கூடுதல் உறுதித்தன்மை வாய்ந்த பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நெக்ஸா ஷோரூம்கள்

நெக்ஸா ஷோரூம்கள்

மாருதியின் புதிய நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போது 71 நெக்ஸா ஷோரூம்களை மாருதி திறந்துவிட்டது. வரும் 26ந் தேதி பலேனோ விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்குள் நெக்ஸா ஷோரூம்கள் எண்ணிக்கை 80ஐ தொட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நெக்ஸா ஷோரூம்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டும்.

 தமிழகத்தில் நெக்ஸா

தமிழகத்தில் நெக்ஸா

தமிழகத்தில் தற்போது 3 நெக்ஸா ஷோரூம்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. வரும் டிசம்பருக்குள் மேலும் 7 நெக்ஸா ஷோரூம்களை தமிழகத்தில் திறக்க இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

மாருதி ஸ்விஃப்ட் காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆனால், பெட்ரோல் மாடலில் முதல்முறையாக மாருதி நிறுவனம் சிவிடி கியர்பாக்ஸை அறிமுகம் செய்கிறது.

 
English summary
Some Important Things About Maruti Baleno Car.
Story first published: Monday, October 19, 2015, 10:29 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos