புதிய ஹோண்டா ஜாஸ் காரில் ஆவலைத் தூண்டும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Written By:

இன்னும் சில மாதங்களில் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பல்வேறு விதங்களிலும் முற்றிலும் புதிய வர்த்தக கொள்கையில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய கார் மாடல்களில் முக்கியமானது.

மிகச்சிறப்பான டிசைனுடன் வரும் புதிய ஜாஸ் கார் கவர்ச்சி தாரகையாக இந்தியர்களை விரைவில் வசீகரிக்க வருகிறது. அவ்வாறு அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய ஹோண்டா ஜாஸ் தரப்போகும் சர்ப்ரைஸ் பரிசுகள் என்னென்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

சவாலான விலை

சவாலான விலை

முந்தைய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமே, அதிகப்படியான விலைதான். ஆனால், புதிய தலைமுறை மாடலை போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் களமிறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதற்காக, பெரும்பான்மையான பாகங்களை இந்தியாவிலிருந்து சப்ளை பெற உள்ளது ஹோண்டா.

 பேடில் ஷிப்ட் வசதி

பேடில் ஷிப்ட் வசதி

புதிய ஹோண்டா ஜாஸ் கார் பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வர இருக்கிறது. இதிலென்ன சர்ப்ரைஸ் என்கிறீர்களா? இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக ஸ்டீயரிங் வீலிலேயே கியர் மாற்றும் வசதியை தரும் பேடில் ஷிப்ட் கொண்டதாக வர இருக்கிறது.

 டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் முதல்முறையாக இந்தியாவில் டீசல் எஞ்சின் மாடலிலும் வர இருக்கிறது. 99 பிஎச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சினுடன் புதிய ஜாஸ் வர இருப்பதும் இந்தியர்களின் ஆவலைத் தூண்டும் விஷயமே.

மைலேஜ்

மைலேஜ்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடல் மிகுந்த எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஹோண்டா விற்பனை செய்து வரும் சிட்டி செடான், மொபிலியோ எம்பிவி, அமேஸ் காம்பேக்ட் செடான் கார்களை போன்று இந்த காரும் சிறப்பான மைலேஜை தரும் என்பதும் இந்தியர்களுக்கு பெரும் ஆவலை கிளறியுள்ளது. தவிரவும், முந்தைய பெட்ரோல் மாடலைவிட புதிய மாடல் 35 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் இருக்கும்.

ஆஹா அம்சங்கள்

ஆஹா அம்சங்கள்

டச் ஏசி கன்ட்ரோல்கள், பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக ஸ்டோரேஜ் வசதிகள் போன்றவை புதிய ஜாஸ் காரின் குறிப்பிடத்தக்க வசதிகளாக இருக்கும்.

இடவசதி

இடவசதி

பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களிலேயே அதிக இடவசதியை அளிக்கும் காராக இருக்கும். நிரம்பிய வசதிகள், டீசல் எஞ்சின், ஹோண்டா பிராண்டு என வாடிக்கையாளர்களை ஒரே நொடியில் முடிவெடுக்க வைக்கும் தகுதிகளுடன் புதிய ஜாஸ் கார் இருக்கும் என நம்பலாம்.

போட்டி

போட்டி

விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு இந்த மாடல் நேரடி போட்டியாக இருக்கும்.

 

English summary
New gen Honda Jazz will get CVT automatic transmission with steering mounted paddle shifters (with petrol variant), a segment first. Speaking of the launch, Jazz was expected to enter in the first half of 2014. 
Story first published: Monday, January 5, 2015, 14:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark