குஜராத் ஃபோர்டு கார் ஆலை பற்றி 9 முக்கியத் தகவல்கள்!

By Saravana

குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு கார் ஆலையை அம்மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நேற்று திறந்து வைத்தார்.

இந்த புதிய கார் ஆலை திறப்பு விழாவில் ஃபோர்டு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிகேல் ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த புதிய கார் ஆலையின் முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. இந்தியாவில் 2- வது கார் ஆலை

01. இந்தியாவில் 2- வது கார் ஆலை

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் அமைத்திருக்கும் இரண்டாவது கார் தொழிற்சாலை இதுவாகும். ஏற்கனவே, சென்னையில் கார் ஆலை செயல்பட்டு வருகிறது.

02. சனந்த் தொழிற்பேட்டை

02. சனந்த் தொழிற்பேட்டை

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அருகில் இருக்கும் சனந்த் தொழிற்பேட்டையில் இந்த புதிய கார் ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதே தொழிற்பேட்டை பகுதியில்தான் டாடா நானோ கார் ஆலை அமைந்திருக்கிறது.

03. முதலீடு

03. முதலீடு

ரூ.5,500 கோடி முதலீட்டில் இந்த புதிய கார் ஆலையை ஃபோர்டு கார் நிறுவனம் அமைத்திருக்கிறது.

04. ஆலை பரப்பளவு

04. ஆலை பரப்பளவு

சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் 460 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

05. சப்ளையர்கள்

05. சப்ளையர்கள்

சனந்த் ஃபோர்டு கார் ஆலையையொட்டி, 19 உதிரிபாக சப்ளையர்களின் ஆலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

06. உற்பத்தி திறன்

06. உற்பத்தி திறன்

துவக்கத்தில் 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர், ஆண்டுக்கு 4.4 லட்சம் கார்களையும், 6.1 லட்சம் கார் எஞ்சின்களையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.

07. தொழிலாளர்கள்

07. தொழிலாளர்கள்

சனந்த் ஃபோர்டு கார் ஆலையில் நேரடியாக 2,500 தொழிலாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

08. ஏற்றுமதி

08. ஏற்றுமதி

சனந்த் தொழிற்சாலை மற்றும் சென்னை தொழிற்சாலையின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதி அளவை மூன்று மடங்கு அதிகரிக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

09. முதல் கார்

09. முதல் கார்

இந்த புதிய ஃபோர்டு கார் ஆலையில் ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் கார் முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் நேற்று ஆலை திறப்பு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ford #four wheeler
English summary
American based automobile giant, Ford inaugurated its new facility in Sanand, Gujarat on 26th March, 2015. 
Story first published: Friday, March 27, 2015, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X