இந்தியா வரும் சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

By Saravana

இந்தியாவில் சாங்யாங் கொரண்டோ காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தற்போது சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மட்டும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சாங்யாங் பிராண்டில் இரண்டாவது மாடலாக சாங்யாங் கொரண்டோ சி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டைலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவற்றுடன் இந்தியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது கொரண்டோ சி. இந்த எஸ்யூவி பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை ஸ்லைடரில் பகிர்ந்துகொள்கிறோம்.

 01. சோதனை ஓட்டம்

01. சோதனை ஓட்டம்

இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்தில், இந்த எஸ்யூவியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக, சாங்யாங் கொரண்டோ எஸ்யூவியை மஹிந்திரா சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.

 02. மாடல் விபரம்

02. மாடல் விபரம்

சாங்யாங் கொரண்டோ சி எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவியின் அழகிய தோற்றம், இன்டிரியர், அடக்கமான வடிவம் போன்றவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

 03. இருக்கை வசதி

03. இருக்கை வசதி

சாங்யாங் கொரண்டோ சி எஸ்யூவியில் 5 பேர் அமர்ந்து பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும்.

04. இந்தியாவில் அசெம்பிள்

04. இந்தியாவில் அசெம்பிள்

இந்த எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களை கவரும் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

05. எஞ்சின்

05. எஞ்சின்

சாங்யாங் கொரண்டோ எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 149 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் கொண்டது. டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 149 பிஎஸ் பவர் கொண்டதாகவும், 175 பிஎஸ் பவர் கொண்டதாகவும் இரு மாடல்களில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் எந்தெந்த எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.

06. கியர்பாக்ஸ்

06. கியர்பாக்ஸ்

இந்த எஸ்யூவி தற்போது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதே கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

07. போட்டியாளர்கள்

07. போட்டியாளர்கள்

நிசான் டெரானோ, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் ஐஎக்ஸ்25 போன்ற எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் என்று தகவல்கள் தெரிவித்தாலும், இது சற்று பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08. இந்திய பிரவேசம்

08. இந்திய பிரவேசம்

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய சாங்யாங் கொரண்டோ சி எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ssangyong currently offers a single product in India in the form of Rexton SUV. The Korean automobile manufacturer is brought by Mahindra and they are planning on launching Korando in India.
Story first published: Friday, April 10, 2015, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X