கொரியாவில் புதிய சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம்!

Posted By:

தென்கொரியாவில் புதிய சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்டடுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் தயாரிக்கப்பட்ட முதல் எஸ்யூவி மாடல் டிவோலி.

இந்த புதிய எஸ்யூவி, டிசைனில் அசத்தலாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலான புதிய மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரும் என தெரிகிறது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 முதல் மாடல்

முதல் மாடல்

மஹிந்திரா வசம் வந்த பின்னர் சாங்யாங் நிறுவனம் தயாரித்த முதல் எஸ்யூவி மாடல் இது. 320 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்த புதிய மாடல் எக்ஸ்100 பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவநாகரீக டிசைன் கலாச்சாரத்துக்கு தகுந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் விற்பனையில் நல்ல பங்களிப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் சாங்யாங் நிறுவனத்தின் புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 124 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

7 இஞ்ச் டச் ஸ்கிரீன், பகல் நேர விளக்குகள், ஹீட்டடு சீட், ஹீட்டடு ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகியவை சிறப்பம்சங்களாக கூறலாம்.

விலை

விலை

பேஸ் மாடல் டிஎக்ஸ் மாடல் மேனுவல் மாடல் இந்திய மதிப்பில் ரூ.9.31 லட்சம் விலையிலும், டிஎகஸ் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.10.22 லட்சம் விலையிலும், விஎக்ஸ் மாடல் ரூ.11.36 லட்சம் விலையிலும், எல்எக்ஸ் மாடல் ரூ.12.68 லட்சம் முதல் ரூ.13.53 லட்சம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

சாங்யாங் நிறுவனம் தனது தாயகமான தென்கொரியாவில் ஆண்டுக்கு 40,000 டிவோலி எஸ்யூவிகளையும், 60,000 எஸ்யூவிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இலக்கு வைத்துள்ளது.

 

English summary
SsangYong Motor Company (SYMC), announced the launch of its eagerly awaited ‘Tivoli compact SUV model in Seoul, South Korea. The Tivoli offers innovative styling and remarkable product competitiveness to customers and was launched at the Dongdaemun Design Plaza (DDP). The new SUV was developed over a period of four years.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more