சாங்யாங் டிவோலி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது

By Saravana

எஸ்யூவி தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல எஸ்யூவி மாடலான ரெக்ஸ்டன் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில், அடுத்ததாக சாங்யாங் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான டிவோலியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் மஹிந்திரா முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரியில் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் சாங்யாங் டிவோலி எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.

பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவி

பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவி

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியைவி சற்று கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். மேலும், பிரிமியம் அம்சங்கள் நிறைந்த மாடலாகவும் குறிப்பிடலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் யூரோ-6 மாசு விதிகளுக்கு உட்பட்டது. மேலும், 2 வீல் டிரைவ் சிஸ்டம், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.

அசெம்பிள்

அசெம்பிள்

சாங்யாங் டிவோலி எஸ்யூவி முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள மஹிந்திரா ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். எனவே, போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் வரும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

தென்கொரியாவில் ரூ.9.31 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே ஆரம்ப விலையின் அடிப்படையில் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும்.

Most Read Articles
English summary
Ssangyong is owned by Mahindra and Mahindra and has introduced a single product in Indian market. The Tivoli by Ssangyong has been introduced in the United Kingdom and is gaining popularity rapidly. Mahindra has also put in efforts in the development of the Tivoli for international markets.
Story first published: Monday, December 21, 2015, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X