சர்வதேச பயணத்திற்கு சாங்யாங் டிவோலி தயார்... நம்ம கதை என்னாச்சு 'மஹி'!

By Saravana

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் கடந்த ஆண்டு டிவோலி என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. அட்டாகசமான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியிடப்பட்ட இந்த புதிய எஸ்யூவி ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

கடந்த மாதம் கொரியாவில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜெனீவாவில் நடைபெற உள்ள மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவியை சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சாங்யாங் தெரிவித்துள்ளது. இந்த எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று சாங்யாங் நம்பிக்கை வைத்திருக்கிறது.

மேலும், இதன் அடிப்படையில் ஒரு மஹிந்திரா எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், இந்த எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் இதர அம்சங்களை தெரிந்துகொள்வதற்கு இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

வழக்கமான டிசைனிலிருந்து மாறுபட்ட சாங்யாங் நிறுவனம் வடிவமைத்திருக்கும் புதிய காம்பேக்ட எஸ்யூவி இது. ஒரு சாயலில் ரேஞ்ச்ரோவர் எவோக் தோற்றத்தை வெளிப்படுத்தினாலும், விலை குறைவான மார்க்கெட்டில் இந்த எஸ்யூவி மிகவும் பிரிமியம் தோற்றத்தை கொண்ட மாடலாக இருக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஜெனீவா மோட்டார் ஷோவில் சாங்யாங் டிவோலி எஸ்யூவி பெட்ரோல், டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஞ்சின்கள் யூரோ- 6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டதாக இருக்கும்.

 பெட்ரோல்தான் ஃபர்ஸ்ட்...

பெட்ரோல்தான் ஃபர்ஸ்ட்...

ஐரோப்பிய மார்க்கெட்டில் பெட்ரோல் மாடல் முதலில் விற்பனைக்கு கிடைக்கும். சில மாதங்களுக்கு பின்னர் டீசல் மாடலும், 4 டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 தென்கொரிய விலை விபரம்

தென்கொரிய விலை விபரம்

கடந்த மாதம் தென்கொரியாவில் சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் வசதிகள் குறைவான பேஸ் மாடல் இந்திய மதிப்பில் ரூ.9.31 லட்சத்திற்கும், வசதிகள் நிரம்பிய டாப் வேரியண்ட் மாடல் ரூ.13.53 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நம்ம கதை என்னாச்சு மஹி!

நம்ம கதை என்னாச்சு மஹி!

இந்தியாவில் சாங்யாங் டிவோலி அறிமுகம் செய்யப்பட்டால் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மாடலை இறக்குவதற்கு பதிலாக, இதற்கு இணையான புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிவோலி எஸ்யூவி சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ள நிலையில், இதற்கு இணையான இந்திய மாடல் குறித்து மஹிந்திரா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
South-Korean manufacturer, SsangYong will be launching its Tivoli at 2015 Geneva Motor Show. The manufacturer had launched this new compact SUV in Korea during January, 2015. It was announced that this product will be introduced in several international markets as well.
Story first published: Monday, March 2, 2015, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X