கொரியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

Written By:

தென்கொரியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முகப்பில் புதிய கிரில் அமைப்பு, பகல்நேர விளக்குகளுடன் கூடிய எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய அலாய் வீல்கள் போன்றவை புதிய தோற்றப் பொலிவை கொடுக்கும் அம்சங்களாகியுள்ளன.

Ssangyong Rexton
 

சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் ஆகியவை புதிய வடிவத்துக்கு மாறியுள்ளன. ஸ்மார்ட் கீ, லெதர் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை கூடுதல் சிறப்பம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் ஸ்யூவியின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது விற்பனையில் இருந்து மாடலில் இருக்கும் 184 பிஎச்பி பவரையும் 402 என்எம் டார்க்கையும் வழங்கும் 2,696சிசி டீசல் எஞ்சின் தொடர்ந்து செயலாற்ற உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அல்லது ஆட்டோமேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

இந்த புதிய மாடல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகி வரும் மாடலுக்கு மாற்றாக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

English summary
For 2015, Ssangyong has already revealed its refreshed Rexton SUV, which has been launched in Korea. The manufacturer will get this updated model to India as well and replace their older generation model. It gets several changes to both exterior as well as interior of the SUV.
Story first published: Monday, January 19, 2015, 17:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark