டாடா பிரைமா டிரக் ரேஸில் டீம் கேஸ்ட்ரால் அணி சாம்பியன்!

Posted By:

டெல்லியில் நடந்த இரண்டாவது டாடா பிரைமா டிரக் பந்தயத்தில் டீம் கேஸ்ட்ராம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு முதல் டிரக்குகளுக்காக பிரத்யேக பந்தயத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பந்தயம், டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த பந்தயத்தின் பிரத்யேகமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பங்கேற்ற அணிகள்

பங்கேற்ற அணிகள்

இந்த பந்தயத்தில் டீம் கேஸ்ட்ரால் வெக்டன், டீலர் டேர்டெவில்ஸ், டீலர் வாரியர்ஸ், டீம் கம்மின்ஸ், டாடா டெக்னாலஜீஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் அலைடு பார்ட்னர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கு கொண்டன. சர்வதேச அளவில் பிரபலமான பல முன்னணி டிரக் பந்தய வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.

சுற்றுகள்

சுற்றுகள்

கடந்த சனிக்கிழமை தகுதிச் சுற்று போட்டியும், நேற்று இறுதிச் சுற்றுப் போட்டியும் நடந்தது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

ஃபார்முலா - 1 கார் பந்தய போட்டி இல்லாத குறையை போக்கும் விதத்தில் நடந்த இப்போட்டியை காண ஆயிரணக்கான மோட்டார் பந்தய ரசிகர்கள் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் குவிந்தனர். 45,000 பார்வையாளர்கள் இந்த போட்டியை காண குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விறுவிறுப்பு

விறுவிறுப்பு

16 சுற்றுகளுடன் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்தது. டிரக்குகள் ஒன்றையொன்று சீறிப்பாய்ந்து முந்தி சென்றது, வளைவுகளில் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த டிரக்குகளை கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

 சாம்பியன்

சாம்பியன்

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இந்த இறுதிப் போட்டியில் டீம் கேஸ்ட்ரால் அணியின் வீரர் ஸ்டூவர்ட் ஆலிவர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை டீம் அலைடு பார்ட்னர்ஸ் அணியின் ஸ்டீவ் தாமசும், மூன்றாவது இடத்தை டாடா டெக்னாலஜீஸ் அணியின் ஸ்டீவன் பவெல்லும் பிடித்தனர்.

டாடா பிரைமா டிரக்குகள்

டாடா பிரைமா டிரக்குகள்

இந்த பந்தயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாறுதல்கள் செய்யப்பட்ட 12 பிரைமா டிரக்குகள் பயன்படுத்தப்பட்டன. இந்த பிரைமா டிரக்குகளில் அதிகபட்சமாக 370 எச்பி பவரை அளிக்கும் 8.9 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வல்லமை கொண்டது.

ஸ்பான்சர்கள்

ஸ்பான்சர்கள்

இந்த போட்டிக்கு வாப்கோ, ஜேகே டயர்ஸ், கம்மின்ஸ், கேஸ்ட்ரான் மற்றும் டாடா டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருந்தன.

 

English summary
At the rain-hit Season II T1 Prima Truck Racing, Stuart Oliver of Team Castrol Vectan captured glory yet again. Starting second on the grid in super qualifying, he went on to clinch the title for the second time, in the 16-lap final race.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more