பிரேக் ஃபெயிலியர்: 4 நாடுகளில் சுஸுகி செலெரியோவுக்கு ரீகால் அறிவிப்பு!

Written By:

பிரேக் பிரச்னை காரணமாக, 4 நாடுகளில் சுஸுகி செலெரியோ காரின் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்களில் பிரச்னை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, விற்பனை செய்யப்பட்ட கார்களை திரும்ப அழைக்க சுஸுகி கார் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் செலெரியோ விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காரை இயக்க வேண்டாம் என்றும் உரிமையாளர்களை சுஸுகி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட செலெரியோ வாடிக்கையாளர்களுக்கு தற்காலிகமாக வேறு காரை வழங்குவதாகவும் சுஸுகி உறுதி கொடுத்துள்ளது.

Maruti Celerio
 

சமீபத்தில் சுஸுகி செலெரியோ காரை பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையை சேர்ந்த டெஸ்ட் டிரைவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது, மணிக்கு 128 கிமீ வேகத்தில் இயக்கும்போது பிரேக் ஃபெயிலியர் ஆவது உறுதியானது. இதையடுத்து, இந்த அறிவிப்பை அவசரமாக சுஸுகி கார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

 The Suzuki Celerio has been recalled in UK, Ireland, Australia and New Zealand. The company has suspended sales and has asked owners not to drive the car.
Story first published: Tuesday, February 3, 2015, 10:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark