உங்கள் வாழ்வின் பொன்னான நாள் ஒன்றின் துவக்கம் இங்கே...!!

Posted By:

கார் வாங்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் அலாதியானவை. ஆன்லைனில் விருப்பமான காரை அலசத் துவங்கியது முதல் முன்பதிவு செய்து டெலிவிரி எடுப்பது வரையிலான காலக்கட்டம், பிரசவ அவஸ்தையை போன்றதொரு உணர்வை வழங்கும்.

அதுவும் முதல் காரை வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்வின் பொன்னான தருணமாகவே அமைகிறது. அந்த பொன்னான தருணத்தை மேலும் இனிமையாக்கிடும் விதத்தில், உங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கார்களின் தகவல்களையும், ஆன்ரோடு விலையையும் எளிதாக பெறுவதற்கான வசதிகளை அளித்து வருகிறது. அந்த தகவல்களை எளிதாக தெரிந்துகொள்ளும் விதத்தில், படங்களுடன் இந்த செய்தித்தொகுப்பை வழங்குகிறோம்.

புதிய கார்கள்

புதிய கார்கள்

அனைத்து பிராண்டு கார்கள் பற்றிய தகவல்களை எளிதாக பெறுவதற்கான வசதியை 'புதிய கார்கள்' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சில ஆண்டுகளாக அளித்து வருகிறது. இந்த பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். பாடி டைப், எரிபொருள் வகை, பட்ஜெட் அடிப்படையில் நீங்கள் உங்களது கார் மாடலை தேர்வு செய்துகொள்ள முடியும்.

புதிய கார் பக்கம்

கார் மாடல் பக்கம்

கார் மாடல் பக்கம்

ஒரு குறிப்பிட்ட கார் மாடலை தேர்வு செய்த பின்னர், இந்த மாடல் பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள். இந்த பக்கத்தில், கார்களின் மைலேஜ், எக்ஸ்ஷோரூம் விலை, எத்தனை வேரியண்ட்டுகள் கிடைக்கின்றன, அந்த வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகள், தொழில்நுட்ப விபரங்கள் என அனைத்தையும் பெற முடியும். இதே பக்கத்தின் கீழ ஸ்க்ரோல் செய்து சென்றால், நீங்கள் செய்துள்ள மாடலுக்கான நேர் போட்டியான மாடல்களை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். காரின் படங்கள், வண்ணங்கள் மற்றும் இதர கார்களை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து ஒப்பிட முடியும். அடுத்த இரு ஸ்லைடுகளிலும் மாடல் பக்கத்தின் கூடுதல் வசதிகளை பெறலாம்.

கார் மாடல் பக்கம்

குறிப்பு: உதாரணத்திற்கு ஸ்விஃப்ட் காரின் பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள் ஒப்பீடு

வேரியண்ட்டுகள் ஒப்பீடு

மாடல் பக்கத்தில் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளை தேர்வு செய்து கொண்டு, வேரியண்ட்டுகளில் கிடைக்கும் வசதிகளின் விபரத்தை மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இந்த ஒப்பீட்டு பக்கத்திலிருந்து வேறு ஒரு கார் மாடலை தேர்வு செய்ய முடியும். இந்த பக்கத்தின் வலது ஓரத்தில் அந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஸ்விஃப்ட் காரின் வேரியண்ட் ஒப்பீட்டு பக்கம்

ஒப்பீடு

ஒப்பீடு

நீங்கள் தேர்வு செய்துள்ள மாடலுடன், சந்தையில் இருக்கும் பிற கார் மாடல்களை எளிதாக ஒப்பிட்டு பார்ப்பதற்கான வசதியை கார் மாடல் பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே காரின் வீடியோவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கார் ஒப்பீடு

உதாரணத்திற்காக மாருதி ஸ்விஃப்ட் காரின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டையும், ஹூண்டாய் எலைட் ஐ20 மேக்னா பெட்ரோல் வேரியண்ட்டையும் ஒப்பீடு செய்து காட்டியுள்ளோம்.

ஆன்ரோடு விலை

ஆன்ரோடு விலை

மேற்கண்ட சேவைகளுக்கு முத்தாய்ப்பாக, தற்போது அனைத்து பிராண்டு கார்களின் ஆன்ரோடு விலை விபரத்தை மிக எளிதாக பெறுவதற்கான வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளோம். பிற தளங்களில் உங்களது தனிப்பட்ட விபரங்களான மொபைல்எண், இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது. ஆனால், எந்தவொரு இடையூறும் இல்லாமல் இந்த சேவையை நீங்கள் பெற முடியும். மாருதி, ஹூண்டாய், ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் என எந்தவொரு நிறுவனத்தின் கார்களின் ஆன்ரோடு விலைகளையும் நொடியில் பெறலாம்.

உதாரணம்: சென்னையில் மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை விபரம்

சில க்ளிக்குகளில் ஓவர்

சில க்ளிக்குகளில் ஓவர்

பொதுவாக ஆன்ரோடு விலை பக்கம் சென்னை விபரத்தை தருவதாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களது ஊரின் ஆன்ரோடு விலையை இந்த பக்கத்தில் மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும். தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களின் ஆன்ரோடு விலையை, 'வேறு ஊரை தேர்வு செய்க' என்ற டிராப்டவுன் பாக்ஸிற்கு சென்று சொடுக்கினால், உங்கள் ஊரின் ஆன்ரோடு விலையை மிக சரியாக தெரிந்துகொண்டு கார் வாங்கும் திட்டத்தை துவங்கலாம். இதனை ஸ்லைடரில் வழங்கியுள்ளதால், பக்கத்தை மேலே கீழே இறக்காமல், எளிதாக வேரியண்ட்டுகளின் விலையை தெரிந்துகொள்ளலாம்.

அனைத்து ஊர்களின் ஆன்ரோடு விலை

அனைத்து ஊர்களின் ஆன்ரோடு விலை

நாட்டின் பிற பகுதியில் வசிப்பவர் என்றாலும், அதே டிராப் டவுன் பாக்ஸிற்கு சென்று நீங்கள் வசிக்கும் நகரை தேர்வு செய்து ஆன்ரோடு விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பெற முடியும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆன்ரோடு விலை பகுதியில் கூடுதல் காலத்துக்கான வாரண்டி, ஹேண்ட்லிங் சார்ஜ் மற்றும் இதர கூடுதல் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

கார் டீலர்

கார் டீலர்

உங்களது ஊரில் இருக்கும் கார் டீலர்கள் விபரத்தை ஆன்ரோடு விலை விபரப் பக்கத்திலேயே வழங்கியுள்ளோம். இதன்மூலம், இருந்த இடத்தில் இருந்த கார் டீலர்களின் விபரத்தை மிக எளிதாக பெற முடியும்.

நன்றி, நன்றி, நன்றி!!

நன்றி, நன்றி, நன்றி!!

தமிழில் இந்த சேவையை தரும் முதல் ஆட்டோமொபைல் தளம் டிரைவ்ஸ்பார்க் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு தொடர்ந்து நல்லாதரவு நல்கி வரும் வாசகர்களுக்கு மீண்டும் நன்றியை உரித்தாக்குகிறோம். இந்த சேவையை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

 
English summary
Email and mobile number NOT required. Click the links on this page for on-road prices in an instant for all car manufacturers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark