ஜெனிவாவில் முஷ்டியை காட்டப் போகும் 120 பிஎச்பி டாடா போல்ட்!

Posted By:

அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில், 120 பிஎச்பி பவர் கொண்ட டாடா போல்ட் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் கார் பிரியர்கள் மத்தியில் பேராவலை கிளப்பியிருக்கிறது. புதிய பெர்ஃபார்மென்ஸ் பேட்ஜ் கொண்டதாக வர இருக்கும் இந்த புதிய போல்ட் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாாட மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

புதிய பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

புதிய பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய போல்ட் காரை புதிய பெர்ஃபார்மென்ஸ் பேட்ஜ் கொண்டதாக வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மத்தியில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாடல்

தற்போதைய மாடல்

சமீபத்தில் நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா போல்ட் காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ் மாடல்

பெர்ஃபார்மென்ஸ் மாடல்

பெர்ஃபார்மென்ஸ் மாடலிலும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 120 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் எஞ்சின் மாற்றப்பட்டிருக்கிறது.

ஃபியட் கியர்பாக்ஸ்

ஃபியட் கியர்பாக்ஸ்

இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் வகை டாடா போல்ட் காரில் ஃபியட் நிறுவனத்தின் புதிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கியர்பாக்ஸ் தற்போது C501 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுவதுடன், இறுதிக்கட்ட சோதனைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் தற்போது ஃபியட் நிறுவனத்தின் மல்டிஜெட் டீசல் எஞ்சின்களில் பயன்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

அதிக சக்தி கொண்ட எஞ்சினை சமாளிப்பதற்காக பாடி, சேஸீ மற்றும் உறுதியான டேம்பர்களுடன் கூடிய புதிய சஸ்பென்ஷன் அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், பிரத்யேக பாடி கிட்டும் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகமிருக்கும்.

 
English summary
According to reports, Country's largest vehicle maker Tata Motors is planning to launch new performance brand soon.
Story first published: Friday, February 27, 2015, 16:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark