லியோனல் மெஸ்ஸி, டாடா மோட்டர்ஸ் இடையே புதிய கூட்டனி

Posted By:

டாடா மோட்டர்ஸ் நிறுவனம், சர்வதேச கால்பந்து சூப்பர்ஸ்டார் லியோனல் மெஸ்ஸியுடன் புதிய கூட்டனி உருவாக்கி கொண்டுள்ளது.

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், 2015 நவம்பர் 2-ஆம் தேதியன்று மெஸ்ஸியை, தங்கள் நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் அம்பேஸிடராக அறிவித்தது.

லியோனல் மெஸ்ஸியை கொண்டு, டாடா மோட்டர்ஸ் நிறுவனம் சமீபத்தில் எடுத்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

லியோனல் மெஸ்ஸியை பற்றி...

லியோனல் மெஸ்ஸியை பற்றி...

லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா கால்பந்து அணியில் முக்கியமான விளையாட்டு வீரராக விளங்குகின்றார். மெஸ்ஸி சிறந்த காலபந்து விளையாட்டு வீரருக்கான பரிசை தொடர்ந்து 4 ஆண்டுகள் பெற்றுள்ளார்.

ஸ்பேனிஷ் கால்பந்து அணி பார்ஸிலோனாவுக்காக விளையாடும் மெஸ்ஸி, வெரும் கால்பந்து விளையாடுவதில் மட்டும், சுமார் 20 மில்லியன் யூரோக்கள் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

லியோனல் மெஸ்ஸி, டாடா நிறுவனத்தின் கூட்டனி;

லியோனல் மெஸ்ஸி, டாடா நிறுவனத்தின் கூட்டனி;

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை பிரபலபடுத்த லியோனல் மெஸ்ஸியை, குளோபல் அம்பாஸிடராக அறிவித்துள்ளனர். மெஸ்ஸி, இனி டாடா நிறுவன தயாரிப்புகளை விளம்பரபடுத்துவதில் தொடர்ந்து ஈடுபடவார்.

லியோனல் மெஸ்ஸி, டாடா நிறுவனத்தின் கூட்டனி நீண்ட காலத்திற்கான கூட்டனியாக திகழ உள்ளது.

டாடா நிறுவன தயாரிப்புகளை விள்மபரபடுத்த, வரும் காலங்களில், லியோனல் மெஸ்ஸி, இந்தியாவுக்கும் வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இது தொடர்பான செய்திகளை #MadeOfGreat என்ற ஹேஷ்டேக்கை உபயோகபடுத்தி தெரிந்து கொள்ளலாம்.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக்கான தி கைட், செக்மெண்ட் ரீதியாவும், திறன் ரீதியாகவும், போல்ட் காருக்கும் கீழே வகைப்படுத்தபட்டுள்ளது. இந்த கைட், புதிய காம்பேக்ட் செடான்களை உருவாக்க உதவும் என தெரிகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஸீக்கா, தேர்வு முறையிலான பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் வசதிகளுடன் கிடைக்கும்.

3 சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின், 67 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

3 சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கைட் காருக்கான போட்டி கார்கள்;

கைட் காருக்கான போட்டி கார்கள்;

தி டாடா கைட் மாடல் கார், ஹூண்டாய் ஐ10, மாருதி சுசுகி செலிரியோ மற்றும் வேகன் ஆர் மாடல கார்களுடன் போட்டியை எதிர் கொள்ள உள்ளது.

டாடா நிறுவனம், இந்த கைட் மாடல் காரை, சர்வதேச அளவில் விற்பனை செய்ய உள்ளது. அதை கருத்தில் கொண்டே, லியோனல் மெஸ்ஸியை, பிராண்ட் அம்பாஸிடராக தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

டாடா மோட்டர்ஸ் நிறுவனம், இந்த புதிய ஹேட்ச்பேக்-கை 2015-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2016-ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட உள்ளது. இந்த கைட், புதிய காம்பேக்ட் செடான் உருவாக்க உதவும் என தெரிகிறது.

வருங்கால வெளியீடுகள்;

வருங்கால வெளியீடுகள்;

இந்தியா மற்றும் உலக அளவில், இளம் மற்றும் நவீன வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் டாடா நிறுவனம் புத்தாக்கம் செய்ய உள்ளது.

தி கைட் ஹேட்ச்பேக் காரை அடுத்து, புதிய மற்றும் நவீன எஸ்யூவியான ‘ஹெக்ஸா' மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ‘ஹெக்ஸா' காரானது, 2016-ஆம் ஆண்டு பாதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

விலை;

விலை;

தி கைட் காரின் விலை குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்பவில்லை. இதன் விலை குறித்த விவரங்கள் காரின் வெளியீட்டின் போது தான் தெரிய வரும் என தெரிகிறது.

டாடாவின் இந்த புதிய காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார், இந்திய சந்தையில், சுமார் 4 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பர வீடியோ;

லியோனல் மெஸ்ஸி கொண்டு படமாக்கப்பட்டுள்ள, டாடா நிறுவனத்தின் கைட் மாடல் காரின் விளம்பர வீடியோவை காண

கிளிக் செய்யவும்...

English summary
Tata Kite And Lionel Messi joined hands for new long term partnership. One of the leading Automobile makers Tata Motors and one of the greatest Football Players Lionel Messi have joined hands for the international level promotion of Cars made by Tata Motors.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark