2 - ஆம் ஆண்டு டாடா டிரக் பந்தய தேதிகள் அறிவிப்பு - முழு விபரம்!

Posted By:

இரண்டாம் ஆண்டு டாடா டிரக் பந்தயம் குறித்த அட்டவணை மற்றும் பங்கேற்கும் அணிகள் உள்ளிட்ட விபரங்கள் மும்பையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் டிரக் பந்தயத்தை அறிமுகம் செய்தது. டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த டிரக் பந்தயம் பரபரப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், இரண்டாம் ஆண்டு போட்டி குறித்து அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. முழுமையான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

அட்டவணை

அட்டவணை

வரும் மார்ச் 14 மற்றும் 15ந் தேதிகளில் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

திருவிழா

திருவிழா

முதல் நாள் இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளும், இரண்டாவது நாள் இரண்டு இறுதிச்சுற்றுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. மதியம் 12 மணி முதல் இரவு 7.30 மணிவரை போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அணிகள்

அணிகள்

இந்த ஆண்டு 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. டீம் கேஸ்ட்ரால் வெக்டன், டீம் கம்மின்ஸ், டீம் டாடா டெக்னாலஜீஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ், டீம் டீலர் வாரியர்ஸ், டீம் டீலர் டேர்டெவில்ஸ் மற்றும் டீம் அலைடு பார்டனர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

 புதிய பிரைமா டிரக்குகள்

புதிய பிரைமா டிரக்குகள்

கடந்த ஆண்டைவிட அதிக மாற்றங்கள் கொண்ட புதிய டாடா பிரைமா பந்தய டிரக்குகள் இந்த ஆண்டு அணிகளுக்கு வழங்கப்பட உள்ளன. அதிக செயல்திறன், வேகம், இலகு எடை மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக இருக்கும். இந்த புதிய பிரைமா பந்தய டிரக்குகளில் 370 பிஎச்பி பவரையும், 1550என்எம் டார்க்கையும் வழங்கும் 8.9 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ வேகம் முதல் 130 கிமீ வேகம் வரை செல்லும்.

 இந்திய வீரர்களுக்கு பயிற்சி

இந்திய வீரர்களுக்கு பயிற்சி

இந்த ஆண்டு ஒரு இந்திய வீரர் கூட இந்த டிரக் பந்தயத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், ஆர்வமுள்ள இந்தியர்களுக்கு அதிக செயல்திறன் கொண்ட இந்த பந்தய டிரக்குகளை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க டி1 டிரைவர் புரொகிராம் என்ற பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய டாடா ரேஸிங் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் அடுத்த ஆண்டு டிரக் பந்தயத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா டிரக் பந்தயத்திற்கான கோப்பை

டாடா டிரக் பந்தயத்திற்கான கோப்பையை படத்தில் காணலாம்.

English summary
India's largest manufacturer of automobiles and trucks, Tata motors had launched last year the inaugural Truck racing competition. Now they have announced that they will be laying the rubber with their trucks on Buddh International Circuit on 15th of March, 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more