ஜெனிவாவில் முஷ்டியை உயர்த்திய டாடா போல்ட் ஸ்போர்ட் கான்செப்ட்!

Written By:

நம் நாட்டில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த டாடா போல்ட் காரின் பெர்ஃபார்மென்ஸ் கான்செப்ட் மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். டாடா போல்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் மாடல் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

சாதாரண போல்ட் மாடலில் ஸ்பெஷல் பாடி கிட் மற்றும் பெட்ரோல் எஞ்சினை கூடுதல் சக்தியை அளிக்கும் வகையில் மாறுதல்களை செய்து இந்த ஸ்போர்ட் கான்செப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

120 பிஎச்பி எஞ்சின்

120 பிஎச்பி எஞ்சின்

தற்போது நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் டாடா போல்ட் காரின் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் 89 பிஎச்பி பவரை அளிக்கும். இதனை 120 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் மாறுதல்களை செய்துள்ளனர்.

 உறுதியான கட்டமைப்பு

உறுதியான கட்டமைப்பு

அதிக சக்தி கொண்ட எஞ்சினை சமாளிப்பதற்காக பாடி, சேஸீ மற்றும் உறுதியான டேம்பர்களுடன் கூடிய புதிய சஸ்பென்ஷன் அமைப்புடன் வர இருக்கிறது. மேலும், பிரத்யேக பாடி கிட்டும் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகமிருக்கும்.

 ஃபியட் கியர்பாக்ஸ்

ஃபியட் கியர்பாக்ஸ்

இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் வகை டாடா போல்ட் காரில் ஃபியட் நிறுவனத்தின் புதிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கியர்பாக்ஸ் தற்போது C501 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுவதுடன், இறுதிக்கட்ட சோதனைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் தற்போது ஃபியட் நிறுவனத்தின் மல்டிஜெட் டீசல் எஞ்சின்களில் பயன்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

பெர்ஃபார்மென்ஸ் பிராண்டு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய பெர்ஃபார்மென்ஸ் பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த பிராண்டில் முதலாவதாக இந்த புதிய போல்ட் ஸ்போர்ட் காரை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மத்தியில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
The 2015 Geneva Motor Show witnessed participation by Indian automobile giant, Tata Motors. It showcased it all-new hatchback the Bolt in a sporty avatar. The Indian manufacturer displayed its Bolt Sport model with significant updates.
Story first published: Saturday, March 7, 2015, 13:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark