மஹிந்திராவை ஒரு கை பார்க்க அரை டஜன் எஸ்யூவிகளை களமிறக்கும் டாடா!

Written By:

2017ம் ஆண்டிற்குள் வெவ்வேறு வகையிலான 6 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி வாகன மார்க்கெட்டில் இழந்த இடத்தை திரும்ப பெறும் விதமாக இந்த அதிரடி திட்டத்துடன் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி க்ராஸ்ஓவர் மாடலை டாடா அறிமுகப்படுத்துகிறது. தற்போது எக்ஸ்104 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் வடிவமைக்கப்படுகிறது.

 மினி எவோக்

மினி எவோக்

எக்ஸ்104 குறியீட்டுப் பெயரிலான இந்த க்ராஸ்ஓவர் மாடல் பார்ப்பதற்கு மினி ரேஞ்ச்ரோவர் எவோக் தோற்றத்தை கொண்டிருக்குமாம். அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 ஹெக்ஸா எஸ்யூவி

ஹெக்ஸா எஸ்யூவி

சமீபத்தில் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்ஸா கான்செப்ட் எஸ்யூவியை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா திட்டமிட்டுள்ளது. இந்த கான்செப்ட் தயாரிப்பு நிலை மாடலுக்கான அந்தஸ்துடன் இருப்பதால் விரைவாக இது மார்க்கெட்டிற்கு வரும் என்பது கணிப்பு.

 எக்ஸ்யூவி 500 போட்டியாளர்

எக்ஸ்யூவி 500 போட்டியாளர்

இந்த புதிய ஹெக்ஸா எஸ்யூவி மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். இது ஆரியா க்ராஸ்ஓவரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிரோவுக்கும் நெருக்கடி

பொலிரோவுக்கும் நெருக்கடி

ஊரக மார்க்கெட்டை குறித்து வைத்து மஹிந்திரா பொலிரோவுக்கு எதிராக நிலைநிறுத்தும் வகையில் ஓர் புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. இந்த எஸ்யூவி மாடல் ரேப்டர் அல்லது எக்ஸ்601 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இதுவும், அடுத்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிமியம் எஸ்யூவி

பிரிமியம் எஸ்யூவி

இவற்றை தவிர்த்து லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. க்யூ501 மற்றும் க்யூ502 என்ற குறியீட்டுப் பெயர்களில் லேண்ட்ரோவரின் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளின் பேரில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மாடல்

சர்வதேச மாடல்

க்யூ501 மற்றும் க்யூ502 ஆகிய மாடல்கள் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லும் திட்டத்துடன் வடிவமைக்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூர், ஹூண்டாய் சான்டா ஃபீ உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இணையானதாக இருக்கும்.

சஃபாரி ஸ்ட்ராம் ஃபேஸ்லிஃப்ட்

சஃபாரி ஸ்ட்ராம் ஃபேஸ்லிஃப்ட்

சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவிலேயே மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த மாடல் தற்போது தீவிர சாலை சோதனைகளில் இருந்து வருகிறது. இந்த புதிய சஃபாரி ஸ்ட்ராம் புதிய இன்டிரியர் மற்றும் கூடுதல் சக்திகொண்டதாக வர இருக்கிறது.

 
English summary

 Country's largest vehicle maker Tata Motors is planning to launch 6 SUV models across segments.
Story first published: Friday, March 20, 2015, 14:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark