மார்க்கெட்டிங்கில் டாடா கில்லி... போல்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்தால் இலவச டாக்டைம்!

Posted By:

டாடா போல்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்தால், ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ.50 மதிப்புடைய இலவச டாக்டைம் பெறும் வாய்ப்பை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

புதிய கார் மாடல்களை வித்தியாசமான முறைகளில் விளம்பரப்படுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ். ஸெஸ்ட் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுடன் ஸெஸ்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான சாவி ஒன்றை வழங்கியது.

Tata Bolt
 

அதை எடுத்துச் சென்று அருகிலுள்ள டீலர்களில் ஸெஸ்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை வழங்கியது. இதைத்தொடர்ந்து, போல்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் விளம்பரம் செய்திருந்ததோடு, ஸ்மார்ட் கார்டு ஒன்றையும் வழங்கியது.

அந்த கார்டு மூலமாக டீலர்களில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பையும், பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், டாடா போல்ட் காருக்கு மீண்டும் ஒரு புதிய விளம்பர யுக்தியை பின்பற்றியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

சற்றுமுன் எனது மொபைல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் டாடா போல்ட் காரை செய்யும் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ரூ.50 டாக்டைம் இலவசமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 7530816262 என்ற எண்ணில் டெஸ்ட் டிரைவுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
ata Offers Free Talktime for Bolt Test Drive Compaign.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark