டாடா ஸெஸ்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

Written By:

டாடா ஸெஸ்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, ஓர் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டாடா ஸெஸ்ட் காரின் XMS வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்த்து இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்பெஷல் மாடல், வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும்.

Tata Zest
  

வெளிப்புறத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அழகு சேர்க்கிறது. அத்்துடன் சி பில்லருக்கு அருகில் ஆனிவர்சரி எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீல் கவர்கள், பியானோ பிளாக் மற்றும் வெள்ளை என இரட்டை வண்ணத்திலான சைடு மிரர்கள், முன்புறத்தில் புதிய பம்பர் அமைப்பு ஆகியவை கூடுதலாக இருக்கின்றன.

உட்புறத்திலும் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்கஃப் பிளேட், ரிமோட் வசதியுடன் கூடிய பின்புற விண்ட் ஷீல்டுக்கான திரை சீலை, முன் இருக்கையில் ஆனிவர்சரி எடிசன் எம்பிராய்டரி பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கிறது.

டாடா ஸெஸ்ட் காரின் பெட்ரோல் ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.5.89 லட்சம் விலையிலும், டீசல் ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.6.94 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

English summary
Tata Motors has launched the anniversary special edition of Zest Car in domestic car.
Story first published: Friday, September 11, 2015, 10:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark