மார்க்கெட்டில் கிடைக்கும் 10 சிறந்த 'டபுள் டின்' கார் ஆடியோ சிஸ்டம்கள்!

Posted By:

கார்களில் ஆடியோ சிஸ்டம் என்பது இன்றியமையாத விஷயம். இப்போது பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களிலேயே சிறந்த கார் ஆடியோ சிஸ்டத்தை வழங்குகின்றன. இருப்பினும், பலருக்கு தங்களுக்கு விருப்பமான பிராண்டு அல்லது உயர்வகை கார் ஆடியோ சிஸ்டத்தை காரில் பொருத்த பிரியப்படுகின்றனர்.

மேலும், பேஸ் மாடல் காரை வாங்கும் பலர் வெளியில் சிறந்த ஆடியோ சிஸ்டம்களை வாங்கி பொருத்திக் கொள்ள ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக மார்க்கெட்டில் இப்போது கிடைக்கும் 10 சிறந்த 2 டின் கார் ஆடியோ சிஸ்டம்களை பற்றிய விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. அல்பைன் - CDE- W233F

10. அல்பைன் - CDE- W233F

விலை: ரூ.12,980

யுஎஸ்பி போர்ட், ஐபோன் இணைப்பு வசதி, 3.5 மிமீ ஆக்ஸ் போர்ட், ஸ்டீயரிங் வீல் ரிமோட் கன்ட்ரோல், எல்சிடி திரை போன்ற வசதிகள் உள்ளன. இது ஹெட்யூனிட் மட்டுமே. ஸ்பீக்கர்கள் தனியாக வாங்க வேண்டியிருக்கும். ஓர் ஆண்டுக்கான வாரண்டியுடன் கிடைக்கிறது.

09. ஜேவிசி Kw v11

09. ஜேவிசி Kw v11

விலை: ரூ.18,990

இந்த ஹெட்யூனிட்டில் 6.2 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்டது. ஐபோன் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. யுஎஸ்பி போர்ட், ரியர் வியூ கேமராவை இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டது. 3 சப் ஊஃபர்கள் வழங்கப்படுகின்றன. 2 ஆண்டு வாரண்டியுடன் கிடைக்கிறது.

08. பிளாபங்கட் லாஸ் ஏஞ்சல்ஸ் 500

08. பிளாபங்கட் லாஸ் ஏஞ்சல்ஸ் 500

விலை: ரூ.23,990

ஐ பாட், ஐபோன் இணைப்பு, புளுடூத் வசதி கொண்டது. 6.2 இஞ்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஜிட்டல் திரை உள்ளது. யுஎஸ்பி போர்ட், கார் ரீடர் வசதி, வீடியோ ப்ளேபேக் வசதிகளை தரும். ரியர் வியூ கேமராவையும் இணைத்துக் கொள்ளலாம். இன்னும் பல வசதிகளை இந்த கார் ஆடியோ சிஸ்டம் வழங்கும். 2 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

 07. கென்வுட் DDX - 4033BT

07. கென்வுட் DDX - 4033BT

விலை: 27,990

டிவிடி, புளூடூத் வசதி, 6.1 இஞ்ச் டச் ஸ்கிரீன் பேனல் கொண்டது. நேவிகேஷன் சிஸ்டத்தை இணைத்துக் கொள்ளும் வசதியுடன் கிடைக்கிறது.

06. க்ளாரியன் VX402A

06. க்ளாரியன் VX402A

விலை: ரூ.29,990

6.2 இன்ச் எல்சிடி டச்ஸ்கிரீன் மானிட்டர், பின்புற இருக்கை பயணிகளுக்கான கூடுதல் டிவி திரைகளுக்கான அவுட் புட், 45*4 பில்ட் இன் ஆம்பிளிஃபயர், ரியர் வியூ கேமரா இணைப்பு வசதி ஆகியவை கொண்டது.

05. சோனி XAV- 712BT

05. சோனி XAV- 712BT

விலை: ரூ.33,990

7 இஞ்ச் டிஎஃப்டி ஆக்டிவ் டச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் இணைப்பு, புளுடூத் வசதி, வாய்ஸ் கமாண்ட் போன்ற பல நவீன வசதிகளை வழங்குகிறது.

04. ஜேவிசி KW NSX1

04. ஜேவிசி KW NSX1

விலை: ரூ.34,990

6.1 இன்ச் மானிட்டர், யுஎஸ்பி போர்ட், ஐபோன் இணைப்பு, புளுடூத் வயர்லெஸ் தொழில்நுட்ப வசதி, சப் ஊஃபர் கன்ட்ரோல் என பல்வேறு நவீன வசதிகளை அளிக்கிறது.

03. அல்பைன் IVA W520E

03. அல்பைன் IVA W520E

விலை: ரூ.47,990

7.2 இன்ச் டச்ஸ்கிரீன் திரை, ஐபாட் கன்ட்ரோல், வாய்ஸ் டயல் வசதியுடன் கிடைக்கிறது. வீட்டிலேயே வந்து இந்த ஆடியோ சிஸ்டத்தை பொருத்தி தரும் வசதியும் வழங்கப்படுகிறது.

02. பிளாபங்கட் பிலடெல்பியா 835

02. பிளாபங்கட் பிலடெல்பியா 835

விலை: ரூ.54,990

7 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஹேண்ட்ஸ் ப்ரீ மொபைல் அழைப்பு வசதி, யுஎஸ்பி போர்ட், புளுடூத் வசதிகளை வழங்கும். 2 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் கிடைக்கிறது.

 01. கென்வுட் DNN9330BT

01. கென்வுட் DNN9330BT

விலை: 99,990

7 இன்ச் டச்ஸ்கிரீன் திரை, வைஃபை வசதியை அளிக்கும் யுஎஸ்பி டோங்கிள், கார்மின் இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் கிடைக்கிறது. 2 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் கிடைக்கிறது.

 
English summary
Ten Best Double Din Car Stereos Available In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark