இன்றைய தேதியில் இந்தியாவில் அவசியம் இருக்க வேண்டிய 10 கார்கள்!!

Written By:

பார்த்த கார் மாடல்களையே பார்த்து அலுத்து விட்டதா, கேட்ட பிராண்டு பெயர்களிலேயே புதிய மாடல்கள் வந்து போரடிக்கிறதா? ஏதாவது புத்தம் புதிய மாடல் இப்போது இந்திய மார்க்கெட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உங்கள் மனது நினைக்கிறதா?

ஆம், அதுபோன்று உங்கள் மனதில் தோன்றும் எண்ணத்திற்கேற்ப இப்போது இந்திய மார்க்கெட்டில் இருக்க வேண்டிய 10 புதிய கார் மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியுள்ளோம். எங்களின் 10 புதிய கார் மாடல்கள் கொண்ட லிஸ்ட் இதோ... இந்திய மார்க்கெட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் கார் மாடல் குறித்தும் அனைவருடன் பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

10. டொயோட்டா வயோஸ்

10. டொயோட்டா வயோஸ்

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னாவுக்கு நேர் போட்டியாக இருக்கும். இந்த காரை இந்தியாவில் களமிறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் பெட்ரோல், டீசல் மாடல் உண்டு. இந்த மாடலால் நிச்சயம் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க முடியும் என்பது என் கணிப்பு. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் மாடல் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 09.செவர்லே ட்ராக்ஸ்

09.செவர்லே ட்ராக்ஸ்

செவர்லே பிராண்டை தூக்கி நிறுத்தும் வல்லமை கொண்டது இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடல். இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற புரளிகளும், இந்த எஸ்யூவியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களும் அதிகம். இப்போது இந்த எஸ்யூவி மட்டும் இருந்தால் செவர்லே விற்பனை எப்படியிருக்கும் என்று ஏங்க வைக்கிறது. டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட்டின் விற்பனையை உடைக்கும் வல்லமையும் உண்டு. பிரேசில் மார்க்கெட்டில் ட்ராக்கர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி பிற நாடுகளில் ட்ராக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. செவர்லே பிராண்டு விற்பனையில் மிகச்சிறப்பான, ஸ்திரமான பங்களிப்பை வழங்கும் என கூறலாம். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

08.புதிய ஃபோர்டு ஃபிகோ

08.புதிய ஃபோர்டு ஃபிகோ

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபோர்டு ஃபிகோ காரும் இப்போதைக்கு அவசியமான மாடலாக இருக்கிறது. ஏனெனில், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் எலைட் ஐ20ஐ விட்டால், புத்தம் புதிய மாடல் என்று எதுவும் இல்லை. எனவே, புதிய மாடல்களை விரும்புவோர்க்கும் சரியான விலையிலான ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும். இந்த காரையும் இப்போதைக்கு தவறவிட்டு வருகிறது இந்திய கார் மார்க்கெட். ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07. ஹூண்டாய் ஐஎக்ஸ்25

07. ஹூண்டாய் ஐஎக்ஸ்25

சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய எஸ்யூவி இந்தியாவிலும் இப்போது இருந்தாலும் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருந்தாலும், இப்போதே இருக்க வேண்டிய கார் மாடல்களில் ஒன்றாக எண்ணத் தோன்றுகிறது. ஸ்டைலான டிசைன், சிறந்த வசதிகளுடன் வரும் இந்த எஸ்யூவி டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டியாக இருக்கும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

06.ஜீப் ரேங்லர்

06.ஜீப் ரேங்லர்

இதற்கு போட்டியான மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் இல்லை. ஆனால், இந்த மாடலுக்கென இப்போதே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. பாரம்பரிய எஸ்யூவி தோற்றம், மிகச்சிறந்த ஆஃப்ரோடரான இந்த எஸ்யூவியும் இப்போது இருக்க வேண்டிய மாடல்களில் ஒன்றாக கூறலாம். அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன், ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்கள் இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்கள். ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 05.ஃபோக்ஸ்வேகன் அப்

05.ஃபோக்ஸ்வேகன் அப்

இந்திய மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தடுமாறி வரும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு மிகச்சிறந்த விற்பனை பங்களிப்பை வழங்க வல்ல சிறிய கார் மாடல்தான் அப். இப்போது இந்தியாவில் இருக்க வேண்டிய மாடல்களில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம். ஃபோக்ஸ்வேகன் லோகோவை விரும்பி அந்த கார்களை வாங்குவோர்க்கு மிகச்சிறந்த பட்ஜெட் கார் மாடலாக இருக்கும். ரூ.4 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04.ஆடி ஏ1

04.ஆடி ஏ1

பென்ஸ் வசம் ஏ கிளாஸ், பி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ வசம் 1 சீரிஸ் உள்ளிட்ட குறைவான விலை சொகுசு ஹேட்ச்பேக் கார்கள் இருக்கும் நிலையில், இந்திய மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் ஆடி நிறுவனத்திடம் இந்த செக்மென்ட்டில் கார் மாடல் இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் ஆடி ஏ1 கார் இப்போது இந்திய மார்க்கெட்டில் இருக்க வேண்டிய மாடல். நிச்சயம் இந்த கார் மிகப்பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. ரூ.25 லட்சம் விலையிலான மாடலாக இதனை கூறலாம்.

 03.ரெனோ க்ளியோ

03.ரெனோ க்ளியோ

டஸ்ட்டரை வைத்து காலம் தள்ளி வரும் ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனைக்கு கைகொடுக்க வல்ல ஓர் ஹேட்ச்பேக் மாடல். இந்தியாவில் இப்போது ரெனோ கைவசம் அவசியம் இருக்க வேண்டிய மாடல். ஐரோப்பிய மார்க்கெட்டில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் இந்த கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட், ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் விலை பட்டியலில் நிலைநிறுத்தப்படும்.

 02.நிசான் கேஷ்கி

02.நிசான் கேஷ்கி

ஐரோப்பிய மார்க்கெட்டில் வெற்றி பெற்ற நிசான் நிறுவனத்தின் கேஷ்கி எஸ்யூவியும் இப்போது நிசான் கைவசம் இருக்க வேண்டிய மாடல். 5 சீட்டர், 7 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், ரூ12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் வருவதற்கான வாய்ப்புள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கு போட்டியாக இருக்கும்.

01.ஹோண்டா சிஆர்வி- டீசல்

01.ஹோண்டா சிஆர்வி- டீசல்

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் இதன் டீசல் மாடல் வந்துவிட்ட நிலையில், இந்தியாவிலும் இதன் டீசல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டால், அது ஹோண்டாவிற்கு நல்ல விற்பனை பங்களிப்பை வழங்கும். மேலும், பிரிமியம் மார்க்கெட்டில் சிறப்பான இடத்தையும் பெறும். இப்போதே அவசியம் இருக்க வேண்டிய மாடல்களில் இதுவும் ஒன்று. ரூ.21 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் வரும் வாய்ப்புள்ளது.

 உங்கள் சாய்ஸ்

உங்கள் சாய்ஸ்

இந்த கார் இருந்தால், நாம் வாங்கிவிடலாமே என்று உங்கள் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தும் கார் மாடல்களின் விபரத்தை கருத்துப் பெட்டியில் எழுதலாம்.

 
English summary

 What is the next car you think the Indian auto market should have? Here is a list of cars we think that should be in India by now.
Story first published: Wednesday, March 25, 2015, 8:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark