Subscribe to DriveSpark

2014ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உலகின் டாப்- 10 கார் நிறுவனங்கள்!

Written By:

கார் வாங்க திட்டமிடும் பலர் பிள்ளையார் சுழி போடுவதே கூகுளிலிருந்துதான். கார் பற்றிய விபரங்களை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து மேய்ந்து தெரிந்துகொள்வதற்கான ஒரே வழி கூகுகள்தான், யாருடைய உதவியும் இல்லாமல்...

இந்த நிலையில், கடந்த ஆண்டு உலக அளவில் கூகுகளில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், முதல் பத்து இடங்களை பிடித்த கார் பிராண்டுகளின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
10. டெஸ்லா மோட்டார்ஸ்

10. டெஸ்லா மோட்டார்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த உயர்வகை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டுகளின் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. 2003ம் ஆண்டு மார்டின் எபெர்ஹார்டு, எலான் மஸ்க், மார்க் தார்பென்னிங், ஜே.பி.ஸ்ட்ராபெல் மற்றும் இயான் ரைட் ஆகியோர் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் கார் நிறுவனம். இந்த நிறுவனத்தின் டெஸ்லா ரோட்ஸ்டெர் கார்தான் உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமைக்குரியது.

09. பிஎம்டபிள்யூ

09. பிஎம்டபிள்யூ

ஜெர்மனியின் மூனிச் நகரின் பவேரியா என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட கார் பிராண்டு பட்டியலில் 9- வது இடத்தை பெற்றிருக்கிறது. 1916ம் ஆண்டு பிரான்ஸ் ஜோசப் பாப், கார்ல் ராப் மற்றும் கமில்லோ கேஸ்டிக்லியோனி ஆகியோரால் இணைந்து ஸ்தாபிதம் செய்யப்பட்டது. 2012ல் உலகின் மிகவும் மதிப்புவாய்ந்த கார் பிராண்டு என்ற அந்தஸ்தை பிஎம்டபிள்யூவுக்கு ஃபோர்ப்ஸ் இதழ வழங்கியது நினைவுகூறத்தக்கது.

08. நிசான்

08. நிசான்

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 1933ம் ஆண்டு மசுஜிரோ ஹஷிமோட்டோ, கென்ஜிரோ டென், ரோகுரோ அயோமா, மெய்டாரோ தாகயுச்சி, வில்லியம் ஆர்.கோர்ஹாம் மற்றும் யோசியு அய்கவா ஆகியோரால் இணைந்து ஸ்தாபிதம் செய்யப்பட்டது. ஜப்பானின் யோகஹாமா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த 1999ல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனத்துடன் கூட்டணி மைத்தது. நிசான், இன்ஃபினிட்டி, டட்சன் மற்றும் நிஸ்மோ ஆகிய பிராண்டுகளில் கார் விற்பனை செய்கிறது. 2020ல் ஓட்டுனரின் துணையில்லாமல் இயங்கும் தானியங்கி காரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

07. ஹோண்டா

07. ஹோண்டா

கூகுள் டாப்- 10 பட்டியலில் 7வது இடத்தில் மற்றொரு ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா இடம்பெற்றிருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள மினோடோ என்ற இடத்தில் தலைமையகத்தை வைத்து செயல்படுகிறது. 1946ம் ஆண்டு சோச்சிரோ ஹோண்டா மற்றும் டகியோ பியூஜிசவா ஆகியோரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. உலகிலேயே அதிக பெட்ரோல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமை ஹோண்டாவுக்கு உண்டு. ஆண்டுக்கு சராசரியாக 14 மில்லியன் பெட்ரோல் எஞ்சின்களை உற்பத்தி செய்கிறது. 1959ம் ஆண்டு முதல் உலகின் அதிக மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமையையும் தக்க வைத்து வருகிறது. கார், பைக் தவிர்த்து, விவசாய கருவிகள், ஏடிவி வாகனங்கள், ரோபோட், விமான தயாரிப்பு என ஹோண்டாவின் மோட்டார் உலகம் பரந்து விரிந்தது.

06. சுபரு

06. சுபரு

ஜப்பானை சேர்ந்த பியூஜி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் சுபரு கார் பிராண்டு கூகுள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. 1953ல் கென்ஜி கிட்டா என்பவரால் துவங்கப்பட்டது. டோக்கியோவிலுள்ள எபிசு என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

 05. ஜெனரல் மோட்டார்ஸ்

05. ஜெனரல் மோட்டார்ஸ்

உலகின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் கூகுள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 1908ம் ஆண்டு வில்லியம் சி. துரந்த், சார்லஸ் ஸ்டூவர்ட் மாட் மற்றும் எல்.ஸ்மித் ஆகியோரால் துவங்கப்பட்டது. உலகின் 37 நாடுகளில் 13 வெவ்வேறு பிராண்டுகளில் கார் விற்பனை செய்து வருகிறது. 1931 முதல் 2007ம் ஆண்டு வரை கார் விற்பனையில் உலகின் நம்பர்- 1 நிறுவனமாக தொடர்ந்து இருந்தது. உலக பொருளாதார சரிவினால், இந்த நிறுவனம் தனது இடத்தை இழந்தது. உலகில் அதிக கார்களை திரும்ப அழைத்த நிறுவனமும் ஜெனரல் மோட்டார்ஸாகத்தான் இருக்கும்.

 04. டொயோட்டா

04. டொயோட்டா

கூகுள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தாலும், சில ஆண்டுகளாக கார் விற்பனையில் உலகின் நம்பர் 1 நிறுவனம் டொயோட்டாதான். 1937ல் கிச்சிரோ டொயோடா என்பவரால் துவங்கப்பட்டது. உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் 12வது பெரிய நிறுவனம். 1997ல் இந்த நிறுவனம் அறிமுகம் செய்த டொயோட்டா பிரையஸ் கார்தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஹைபிரிட் கார் மாடல்.

03. டாட்ஜ்

03. டாட்ஜ்

அமெரிக்காவின் மிக்சிகன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாட்ஜ் நிறுவனம் கூகுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. 1900ம் ஆண்டு ஹோரேஸ் எல்ஜின் மற்றும் ஜான் பிரான்சிஸ் ஆகியோரால் [டாட்ஜ் சகோதரர்கள்] துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மஸில் ரக கார் தயாரிப்பில் புகழ்பெற்றது.

02. ஜீப்

02. ஜீப்

அமெரிக்காவின் பாரம்பரிய ஜீப் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனம் கூகுகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 1941ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற வில்லீஸ் ஜீப்ஸ்டெர் மாடலுடன் மார்க்கெட்டில் நுழைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தினரால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனிநபர் மார்க்கெட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட காலமாக அமெரிக்கன் மோட்டார் கார்ப்பரேஷனின் கீழ் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் தற்போது கிறைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. ஜீப் ரேங்லர், ஜீப் கிராண்ட் செரூக்கி போன்ற மாடல்கள் வெகு பிரபலமானது.

 01. ஃபோர்டு

01. ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம்தான் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த 1903ம் ஆண்டு ஹென்றி ஃபோர்டு உருவாக்கிய இந்த நிறுவனம் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் கார் விற்பனை செய்து வருகிறது. மஸ்டாங், ஈக்கோஸ்போர்ட் போன்ற பல பிரபலமான மாடல்கள் இந்த நிறுவனத்திற்கு தனி அடையாளத்தை தந்து வருகின்றன.

 
English summary
If you searched for a Ford online this year, you weren’t alone. The brand topped the Google Trending Cars list for 2014.
Story first published: Monday, March 30, 2015, 17:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark