இந்த எலக்ட்ரிக் கார்கள் இந்தியா வந்தால் தங்கம் தங்கம்னு தாங்குவாங்கய்யா!

Posted By:

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை விட்டால் வேறு கதியே இல்லையா, சுற்றுச்சூழல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்று தலையை பிய்த்துக் கொண்டதன் விளைவாக கிடைக்கப்பெற்றிருக்கும் தொழில்நுட்பம்தான் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள். மின்சார கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வரும் இவ்வேளையில், உலகின் பல்வேறு நாடுகள் மின்சார கார்களின் தயாரிப்புக்கு முன்னுரிமையையும், ஊக்குவிப்பையும் அளிக்கத் துவங்கியிருக்கின்றன.

ஆனால், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டான இந்தியாவில் இந்த மின்சார கார்களுக்கான வரவேற்பு மிக குறைவு. இருக்கும் ஒரே காரான மஹிந்திரா ரேவா தயாரிப்பும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதற்கு பல காரணங்களை அடுக்க முடியும். உதாரணமாக, இப்போது புதிய கார் ஒன்றை வாங்க நான் திட்டமிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டக்கூடிய வகையில் இருக்க வேண்டும். நீண்ட தூரம் செல்வதற்கும், குறைந்தது 5 பேர் செல்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது நான் மட்டுமல்ல, எல்லோருடைய பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும். அடுத்து கவுரவம். பல லட்சங்களை செலவு செய்து கார் வாங்கும்போது, நம் கவுரவத்தை உயர்த்தும் பிராண்டு அல்லது டிசைனில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுவது இயல்பு.

ஆனால், இப்போது நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் ஒரே மாடல் மஹிந்திரா இ2ஓ. இந்த மின்சார காரின் டிசைன் பரவாயில்லை என்றாலும், நீண்ட தூர பிரயாணங்களுக்கு ஏற்றதில்லை, விலை அதிகம் போன்றவை இந்த காருக்கு வரவேற்பை பெற்றுத்தரவில்லை. அதேநேரத்தில், இதையே மாற்று கோணத்தில் யோசித்தால் மின்சார கார்களுக்கான வரவேற்பை இந்தியாவிலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

விலை கூடுதலாக இருந்தாலும் டிசைன், அதிக ரேஞ்ச் கொண்ட கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதற்கு நம்மவர்களில் ஒருசாரார் நிச்சயம் பெரும் ஆதரவை தருவர் என்பது என் எண்ணம். அதனடிப்படையில், உலக அளவில் விற்பனை செய்யப்படும் சில பிரபல கார் மாடல்கள் இந்தியாவில் இருந்தால் எதிர்காலத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்ற உந்துததில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறேன்.

 01. ஹூண்டாய் ஐ10 எலக்ட்ரிக்

01. ஹூண்டாய் ஐ10 எலக்ட்ரிக்

இந்தியாவில் மிக நம்பகமான, அதிக வரவேற்பை பெற்ற மாடல் ஹூண்டாய் ஐ10. இந்த காரின் எலக்ட்ரிக் மாடல் நிச்சயம் இந்தியர்களிடத்தில் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பை பெறும். ஐ10 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை ஹூண்டாய் உயர்அதிகாரி அர்விந்த் சக்சேனா ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, இந்த கார் மீதான ஆர்வம் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. அடுத்த ஸ்லைடில் முக்கிய விபரங்களை காணலாம்.

ஐ10 எலக்ட்ரிக் தொடர்ச்சி...

ஐ10 எலக்ட்ரிக் தொடர்ச்சி...

ஹூண்டாய் ஐ10 எலக்ட்ரிக் காரில் 49kWh மின் மோட்டாரும், 16 kWh பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. வீட்டில் உள்ள சார்ஜ் பாயிண்ட் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரங்கள் பிடிக்கும். அதுவே, 413V சாக்கெட் மூலமாக சார்ஜ் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். இந்த ஐ10 எலக்ட்ரிக் கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்படும் பட்சத்தில் 160 கிமீ தூரம் வரை செல்லும் என்பதுடன், மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

02. செவர்லே பீட் எலக்ட்ரிக்

02. செவர்லே பீட் எலக்ட்ரிக்

வெளிநாடுகளில் செவர்லே ஸ்பார்க் என்று விற்பனையாகும் இந்தியாவின் பீட் காரின் எலக்ட்ரிக் மாடலும் ஓர் சிறந்த மின்சார கார் மாடலாக இருக்கும். இந்தியாவில் இந்த பீட் எலக்ட்ரிக் காரை 2012 டெல்லி ஆட்டோ ஷோவில் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்தது. இந்த காரை இந்தியாவில் களமிறக்கும் திட்டமும் ஜெனரல் மோட்டார்ஸ் இருப்பது உண்மைதான். இந்த காரின் சிறப்புகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

செவர்லே பீட் எலக்ட்ரிக் தொடர்ச்சி...

செவர்லே பீட் எலக்ட்ரிக் தொடர்ச்சி...

செவர்லே பீட் எலக்ட்ரிக் காரில் 20KWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 240V சார்ஜ் பாயிண்ட் வழியாக சார்ஜ் செய்யும்போது 8 மணிநேரத்தில் முழு சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

03. நிசான் லீஃப்

03. நிசான் லீஃப்

தற்போது உலகின் 35 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 1,58 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் செல்வதற்கான சிறந்த எலக்ட்ரிக் கார் என்பதே இதன் விற்பனை சிறப்பாக வளர்ந்து வருவதற்கு காரணம். அப்படியானால், இந்த காரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் பிறந்துவிட்டதல்லவா, அடுத்த ஸ்லைடில் கூடுதல் விபரம்.

நிசான் லீஃப் தொடர்ச்சி...

நிசான் லீஃப் தொடர்ச்சி...

இந்த காரில் 24KWh லித்தியாம் அயான் பேட்டரியும், 110எச்பி பவரை அதிகபட்சம் வழங்கும் மின் மோட்டாரும் உள்ளது. மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 175 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

04. ஃபோக்ஸ்வேகன் அப் எலக்ட்ரிக்

04. ஃபோக்ஸ்வேகன் அப் எலக்ட்ரிக்

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அப் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். சிறப்பான ரேஞ்ச் கொண்ட கார் என்பதுடன், நகர்ப்புறத்துக்கு மிக சவுகரியமான டிசைன் கொண்ட மாடல். அடுத்த ஸ்லைடில் கூடுதல் விபரங்கள்...

ஃபோக்ஸ்வேகன் அப் எலக்ட்ரிக் தொடர்ச்சி

ஃபோக்ஸ்வேகன் அப் எலக்ட்ரிக் தொடர்ச்சி

இந்த காரில் 18.7 கேவிஎச் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 135 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். 14 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும். இதன் மின்மோட்டார் 82 பிஎஸ் பவரை அளிக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

05. மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக்

05. மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக்

இதுவும் நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் வரப்போகும் மாடல்தான். கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மஹிந்திரா வெரிட்டோ கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல். ஆனால், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை பொறுத்தே இந்த காரை களமிறக்குவது பற்றி பரிசீலிப்போம் என மஹிந்திரா தெரிவித்துவிட்டது. இந்த காரின் சிறப்புகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

வெரிட்டோ எலக்ட்ரிக் தொடர்ச்சி...

வெரிட்டோ எலக்ட்ரிக் தொடர்ச்சி...

வெரிட்டோ எலக்ட்ரிக் காரில் 29 KW மின்மோட்டார் உள்ளது. இந்த கார் மணிக்கு 85 கிமீ வேகம் வரை தொடக்கூடியது. லித்தியம் அயான் பேட்டரிகளை 7 மணிநேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை செல்லலாம். ரூ.9 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. டாடா இண்டிகா விஸ்டா இவி

06. டாடா இண்டிகா விஸ்டா இவி

ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா விஸ்டா இவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரும் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும். அவற்றை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

டாடா இண்டிகா விஸ்டா இவி தொடர்ச்சி...

டாடா இண்டிகா விஸ்டா இவி தொடர்ச்சி...

டாடா இண்டிகா விஸ்டா எலக்ட்ரிக் காரில் 26.5 KWh சூப்பர் பாலிமர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 151 கிமீ வேகம் செல்லக்கூடியது.

07. ஹோண்டா ஜாஸ் எலக்ட்ரிக்

07. ஹோண்டா ஜாஸ் எலக்ட்ரிக்

ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் எலக்ட்ரிக் மாடலும் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பம்சங்களை கொண்டது. சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த காரின் சிறப்புகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஹோண்டா ஜாஸ் எலக்ட்ரிக் தொடர்ச்சி...

ஹோண்டா ஜாஸ் எலக்ட்ரிக் தொடர்ச்சி...

இந்த காரின் பேட்டரியை 240V சாக்கெட் மூலமாக 3 மணிநேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கிமீ செல்லும். 5 பேர் பயணிக்கக்கூடிய வசதிகொண்டது.

08. ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக்

08. ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக்

ஃபோர்டு ஃபோகஸ் எலக்டிரிக் கார் 5 பேர் செல்வதற்கான சிறப்பான இடவசதி கொண்ட மாடல். இந்தியாவில் முழு உத்வேகத்துடன் செயலாற்றி வரும் ஃபோர்டு நிறுவனம் எதிர்காலத்தில் இந்த மாடலை நிச்சயம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரை பற்றிய முக்கியத் தகவல்கள் அடுத்த ஸ்லைடில் உள்ளது.

ஃபோர்டு ஃபோகஸ் தொடர்ச்சி...

ஃபோர்டு ஃபோகஸ் தொடர்ச்சி...

ஃபோர்டு ஃபோகஸ் காரில் 143 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டார் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 122 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

09. சுஸுகி எவ்ரி எலக்ட்ரிக்

09. சுஸுகி எவ்ரி எலக்ட்ரிக்

ஜப்பானில் சுஸுகி எவ்ரி என்ற பெயரில் விற்பனையாகும் கார் மாடலின் இந்திய வெர்ஷனான மாருதி ஈக்கோவின் எலக்ட்ரிக் கார் மாடல் 2010ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிகம் பேர் பயணிக்கூடிய குறைவான விலை எலக்ட்ரிக் மாடல் என்பதால் இதற்கு இந்தியர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.

சுஸுகி எவ்ரி தொடர்ச்சி...

சுஸுகி எவ்ரி தொடர்ச்சி...

இந்த காரில் 50 KV மின் மோட்டார் உள்ளது. இந்த மினி வேனில் இருக்கும் மின்மோட்டார் அதிகபட்சமாக 68 எச்பி பவரை அளிக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 99 கிமீ வரை பயணிக்கும்.

19. டெஸ்லா மாடல் எஸ் கார்

19. டெஸ்லா மாடல் எஸ் கார்

எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு டெஸ்லா மோட்டார்ஸ் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் வெளியானத் தகவலும் நிச்சயம் இந்தியர்களுக்கு இனிப்பான விஷயம்தான். சிறந்த செயல்திறன், டிசைன், தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

20. டெஸ்லா மாடல் எஸ் கார் தொடர்ச்சி...

20. டெஸ்லா மாடல் எஸ் கார் தொடர்ச்சி...

சிறப்பான செயல்திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் கார் 4 விதமான மாடல்களில் விற்பனையாகிறது. இந்த காரின் பேஸ் மாடலில் இருக்கும் மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 329 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 386 கிமீ வரை பயணிக்க முடியும். இத்தனைக்கும் மேலே, இதிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் நிச்சயம் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். ஆடி கார் மோகம் போய் டெஸ்லா வரும் காலம் வெகு தொலைவில் இல்லை...!!

 
English summary
What is the next car you think the Indian auto market should have? Here is a list of electric cars we think that should be in India by now.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark