டெஸ்லா எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் - வியப்பில் ஆழ்த்தும் அம்சங்கள்!!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்டரியில் இயங்கும் டெஸ்லா எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்லா மாடல் எக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் பற்றி அறிந்து கொள்ள உலகமே ஆவலாக இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் ஃப்ரீமாண்ட்டில் உள்ள டெஸ்லா ஆலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அந்நிறுவனத்தின் சிஇஓ., எலான் மஸ்க் வெளியிட்டார். ஃபெராரி, லம்போர்கினிக்கு சவால் விடும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 2+2+2 மற்றும் 2+3+2 என்ற இருவிதமான இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. அதிகபட்சம் ஏழு பேர் வரை பயணிக்க முடியும்.

அசத்தலான கதவுகள்

அசத்தலான கதவுகள்

பல புதுமையான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. ஃபால்கன் விங் எனப்படும் மேல்நோக்கி திறக்கும் கதவுகளை கொண்டுள்ளது. நெருக்கமான பார்க்கிங் பகுதிகளில் கூட இந்த கதவுகள் மேல் நோக்கி திறக்கும்போது இடைஞ்சல் இல்லாத வகையில், டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், கதவுகளில் சென்சார் இருப்பதால், மேல்புறத்தில் கட்டடத்தின் கூரை அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இருப்பதை கண்டுணர்ந்து கதவு திறக்கும் உயரத்தை குறைத்துக் கொள்ளும். இதன் வளைவான கண்ணாடி கூரை அமைப்பும் சிறப்பம்சமும் அனைவரையும் கவர்ந்தது.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்த காரின் உட்புறத்தில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது 17 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும். பொழுதுபோககு வசதிகள், நேவிகேஷன் வசதி, போக்குவரத்து நிலவரம் பற்றிய தகவல்கள், கேபின் கன்ட்ரோல் சிஸ்டம் என்று அடுக்கலாம். இந்த காரில் முன்புறத்தில் கேமராவும், 360 டிகிரி சோனார் கருவியும் உள்ளது. இது ஆட்டோபைலட் சிஸ்டம் மற்றும் தானியங்கி பார்க்கிங் சிஸ்டத்திற்கு சப்போர்ட் செய்யும். அத்துடன், தொடர்ந்து இந்த எஸ்யூவிக்கான சாஃப்ட்வேரை அப்டேட் செய்து தருவதற்கான வசதியும் உள்ளது.

மின் மோட்டார்கள்

மின் மோட்டார்கள்

இந்த எஸ்யூவியில் முன்புறத்திலும், பின்புறத்திலும் மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்தில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 260 பிஎஸ் பவரையும், பின்புறத்தில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 504 பிஎஸ் பவரையும் அளிக்க வல்லது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

இந்த காரை இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன்களில் இயக்க முடியும். சாதாரண டிரைவிங் ஆப்ஷனில் இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். அதேநேரத்தில், லூடிக்ரஸ் என்ற ஸ்போர்ட் மோடுக்கு மாற்றும்போது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடுமாம். அதாவது, ஃபெராரி ஸ்பைடர் 458 [4.5லி வி8] மாடல், லம்போர்கினி கல்லார்டோ எல்பி570-4 மாடல் மற்றும் மெக்லாரன் எம்பி4 - 12சி மாடல் போன்ற உலகின் அதிசிறந்த செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு செயல்திறனில் போட்டியை கொடுக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 249 கிமீ வேகம் வரை எட்ட வல்லது.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த காரில் 90Kw பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், அதிகபட்சமாக 413 கிமீ தூரம் வரை செல்லும் என்று டெஸ்லா தெரிவிக்கிறது. இந்த பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் மூலமாக, இந்த கார் ரோல்ஓவர் எனப்படும் நிலைதவறி கவிழ்ந்து உருளும் வாய்ப்பு அறவே இருக்காது என்கிறது டெஸ்லா. முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் மிக உறுதியான கட்டமைப்பும், மோதல்களின் தாக்கத்தை ஈர்த்து பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத சிறப்பான க்ரம்பிள் ஸோன் கட்டமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மோதல்களின் தாக்கத்தை குறைக்கும் விதத்தில், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சென்சார்கள் உதவியுடன் செயல்படும் அவசர கால பிரேக் சிஸ்டம் உள்ளது. இந்த கார் 5 நட்சத்திர பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.

 காற்று சுத்தகரிப்பு வசதி

காற்று சுத்தகரிப்பு வசதி

அத்துடன், பயணிகளுக்கு ஊறு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்களை தடுக்கும் வசதி கொண்ட HEPA வெளிக்காற்று சுத்திகரிப்பு அமைப்பும் உள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

சாதாரண மாடல் 1.30 லட்சம் டாலர்களும், அறிமுக கொண்டாட்டமாக வெளியிடப்பட இருக்கும் பவுண்டர் எடிசன் மாடல் 1.42 லட்சம் டாலர்கள் விலையிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. 5,000 டாலர்களை கொடுத்து முன்பதிவு செய்தால், அடுத்த ஆண்டு டெலிவிரி கிடைக்கும்.

 
English summary
Tesla Motors has launched, the Model X electric suv, late Tuesday night at a ceremony in California
Story first published: Thursday, October 1, 2015, 11:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark