செவர்லே பீட் காருக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள்

Written By:

கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்புச் சலுகைகளுடன் இப்போது செவர்லே பீட் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மிகச்சிறப்பான டீலாக இந்த புதிய கார் அமையும் என்று கூறலாம்.

புதிய செவர்லே பீட் காரில் க்ரோம் க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட்டுகள், புதிய டெயில் லைட்டுடன் மிக வசீகரமாக இருக்கிறது. புதிய செவர்லே பீட் காரில் இப்போது யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் இணைப்பு வசதிகள் கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

செவர்லே பீட் காரின் டீசல் மாடலில் 56 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் 77 பிஎச்பி பவரையும், 107 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜை பொறுத்தவரையில் டீசல் மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று செவர்லே தெரிவிக்கிறது. பட்ஜெட் விலையிலான டீசல் காரை தேடுவோர்க்கு மிகச்சிறந்த சாய்ஸாக கூறலாம்.

மேலும், செவர்லே பீட் காருக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியை தவிர்த்து, கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வழங்குகிறது செவர்லே. மேலும், முதல் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

சேமிப்புச் சலுகைகள் பற்றிய விபரங்களுக்கு, இங்கே க்ளிக் செய்க

செவர்லே பீட் கார்

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark