மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார் நிறுவனங்கள்!

சந்தைப் போட்டியில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும், விற்பனையை உயர்த்துவதற்கும் கார் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

மார்க்கெட்டில் அதிக பங்களிப்பை பெற்றிருக்கும் நிறுவனங்கள் தங்களது மார்க்கெட் ஷேரை தக்க வைத்துக் கொள்வதற்கும், சிறிய நிறுவனங்கள் தங்களது விற்பனையை உயர்த்தி மார்க்கெட் ஷேரை அதிகரிப்பதற்கும் கடும் பிரயேத்னங்களை மேற்கொண்டிருக்கின்றன.

கடும் போட்டிக்கு மத்தியில் கடந்த மாதம் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பட்டியல்

பட்டியல்

உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் டாப் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியலை அடுத்த ஸ்லைடு முதல் காணலாம்.

10. ஃபோக்ஸ்வேகன்

10. ஃபோக்ஸ்வேகன்

மார்ச் விற்பனை நிலவரப்படி, ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 4,577 கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதில், அதிகபட்ச பங்களிப்பை வழங்கிய மாடல் போலோ கார். மார்ச்சில் 2,861 போலோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையில் இறங்கிய இந்த நிறுவனம் இன்னமும் ஓர் நிலையான இடத்தை பெற முடியாமல் தவிக்கிறது.

 09. நிசான்

09. நிசான்

கடந்த மாதம் 9வது இடத்தில் நிசான் கார் நிறுவனம் உள்ளது. கடந்த மாதம் 4,717 கார்களை நிசான் நிறுவனம் விற்பனை செய்தது. நிசான் விற்பனையில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருக்கும் மாடல் டெரானோ எஸ்யூவி. ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மாடல் நிசானுக்கு உயிர் கொடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் 1,434 டெரானோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

08. ரெனோ

08. ரெனோ

கடந்த மாதம் 8வது இடத்தை பிடித்தது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம். மார்ச்சில் மொத்தம் 4,785 கார்களை ரெனோ கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. வழக்கம்போல் டஸ்ட்டர் எஸ்யூவிதான் ரெனோவுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. கடந்த மாதத்தில் 3,800 டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையாகின. டஸ்ட்டர் இல்லையெனில், ரெனோவின் நிலைமை மிக மோசமாகிவிடும். தற்போது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் டஸ்ட்டர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 07. ஃபோர்டு

07. ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் 5,253 கார்களை விற்பனை செய்திருக்கும் அந்த நிறுவனம் ஏற்றுமதியில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதாவது, உள்நாட்டில் விற்பனை செய்த கார்களைவிட ஏற்றுமதி எண்ணிக்கை மிக அதிகம். கடந்த மாதம் 10,522 கார்கை ஏற்றுமதி செய்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம். கடந்த ஆண்டு மார்ச் மாத ஏற்றுமதியை ஒப்பிடும்போது இருமடங்கு அதிகம். கடந்த மாதம் இந்திய விற்பனையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியது. கடந்த மாதத்தில் 3,751 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை ஃபோர்டு விற்பனை செய்தது.

 06. டொயோட்டா

06. டொயோட்டா

கடந்த மாதத்தில் 13,333 கார்களை இந்தியாவில் விற்பனை செய்து 6வது இடத்தில் இருக்கிறது டொயோட்டா கார் நிறுவனம். அதிகபட்ச பங்களிப்பு இன்னோவாவிடமிருந்து வந்துள்ளது. கடந்த மாதம் 5,851 இன்னோவா கார்களை டொயோட்டா கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

 05. டாடா மோட்டார்ஸ்

05. டாடா மோட்டார்ஸ்

கடந்த மாதம் 5வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்தது. கடந்த மாதத்தில் 15,039 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது. ஸெஸ்ட், போல்ட் உள்ளிட்ட புதிய கார் மாடல்கள் வந்தாலும், அந்த நிறுவனத்தின் இன்டிகாதான் அதிகபட்ச விற்பனை பங்களிப்பை டாடாவுக்கு வழங்கியது. மார்ச்சில் 3,746 இன்டிகா கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது.

04. மஹிந்திரா

04. மஹிந்திரா

கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 21,030 கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது. அதிகபட்ச பங்களிப்பை பொலிரோ வழங்கியது. கடந்த மாதத்தில் 10,481 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்தது. சிறிய கார்களுக்கு போட்டியான விற்பனை எண்ணிக்கையை பொலிரோ தொடர்ந்து பதிவு செய்து வருவதுடன், மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையின் ஆணிவேராக விளங்கி வருகிறது.

03. ஹோண்டா கார்ஸ்

03. ஹோண்டா கார்ஸ்

கடந்த மாதம் ஹோண்டா கார் நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 22,696 கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து அதிகபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகபட்ச பங்களிப்பை சிட்டி கார் வழங்கியது. கடந்த மாதம் 9,777 சிட்டி கார்களை ஹோண்டா விற்பனை செய்தது. டீசல் எஞ்சினை அறிமுகம் செய்தது முதல் ஹோண்டாவின் வர்த்தகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

இரண்டாவது இடத்துக்கு அதிபதியான ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த மாதம் 39,525 கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதிகபட்ச பங்களிப்பை எலைட் ஐ20 கார் வழங்கியது. கடந்த மாதம் 12,812 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

முதல் இடத்தை பிற நிறுவனங்கள் கனவு காண முடியாத அளவில் விற்பனை பங்களிப்பை வைத்திருக்கிறது மாருதி சுஸுகி. கடந்த மாதம் 1,03,719 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருக்கிறது. அதிகபட்ச பங்களிப்பை வழக்கம்போல் ஆல்ட்டோ கார் வழங்கியுள்ளது. கடந்த மாதம் 24,961 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

Most Read Articles
English summary
Top 10 selling carmakers in India for March 2015 along with their best selling car models. The top four positions deserve the credit to be the best.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X