நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டாப் 10 கார்கள்!

பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்களின் வரவால் போட்டி அதிகரித்துள்ளது.மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சிறப்புச் சலுகைகளையும் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்தநிலையில், புதிய மாடல்களின் வரவு, சிறப்புச் சலுகைகள் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தையும் தாண்டி, நடப்பு நிதி ஆண்டின் ஜூலை- செப்டம்பர் இடையிலான காலாண்டில் முதல் 10 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹோண்டா அமேஸ் கார் 10வது இடத்தை பிடித்தது. இதே காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரால் நெருக்கடி ஏற்பட்டாலும், மூன்று மாதங்களின் மொத்த விற்பனை மூலமாக, டாப் 10 பட்டியலில் ஏறியிருக்கிறது ஹோண்டா அமேஸ் கார். கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 13,705 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 11,166 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஃபோர்டு ஆஸ்பயரின் வரவு ஹோண்டா அமேஸ் காருக்கு நெருக்கடியை கொடுத்திருப்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆனால், மாருதி டிசையருக்கு அடுத்து, ஹோண்டா அமேஸ்தான் சிறந்த தேர்வாக பலர் கருதுவதால், தொடர்ந்து விற்பனையில் ஹோண்டா அமேஸ் கலக்கும் என்று கருதப்படுகிறது.

09. ஹோண்டா சிட்டி

09. ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் ஹோண்டா சிட்டி கார் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. டிசைன், டீசல் எஞ்சின், வசதிகள் என்று வாடிக்கையாளர்களை தொடர்ந்து சுண்டி இழுத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 16,287 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மாருதி சியாஸ் டீசல் ஹைபிரிட் மாடல் எந்தளவு ஹோண்டா சிட்டிக்கு எதிராக வேலை செய்கிறது என்பது வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.

08. ஹோண்டா ஜாஸ்

08. ஹோண்டா ஜாஸ்

டாப் 10 பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் ஹோண்டா கார்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய ஹோணடா ஜாஸ் கார் தற்போது நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 16,842 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. டிசைன், வசதிகள், தரம், டீசல் மாடல் ஆகியவை இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்துள்ளது. விரைவில் வர இருக்கும் மாருதி பலேனோ கார் இந்த காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோவின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னர் விற்பனை இன்னும் சூடுபிடித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 24,612 மாருதி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 19,432 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

டாப் 10 பட்டியலில் ஆறாவது இடத்தில் இந்திய கார் மார்க்கெட்டின் ஆணழகன் ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளது. மிக மிக கவர்ச்சியான டிசைன், வசதிகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 15,530 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 26,348 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறந்த பட்ஜெட் கார் மாடல். சிறப்பான டிசைன், அதிக வசதிகள் மற்றும் டீசல் மாடல் ஆகியவை இந்த காருக்கு விற்பனையில் ஓர் சிறப்பான இடத்தை பெற்றுத் தந்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 20,985 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 30,204 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. மேலும், விற்பனை மிகச்சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்திருக்கிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

மாத விற்பனையிலும் சரி, காலாண்டு, முழு ஆண்டு என எந்தவொரு விற்பனை பட்டியலிலும் மாருதி வேகன் ஆர் விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தை ஆஸ்தானமாக போட்டு விடுகிறது. அதிக ஹெட்ரூம் கொண்ட பட்ஜெட் கார் மாடல். வசதிகள், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற அடக்கமான வடிவம், குறைவான பராமரிப்பு செலவீனம் ஆகியவை இந்த காருக்கு சிறப்பான இடத்தை பெற்றுத் தந்திருக்கிறது. மறு விற்பனை மதிப்பிலும் சிறப்பாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 40,536 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 45,100 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

நீங்களே கணித்திருப்பீர்கள், இந்த இடத்திற்கு ஆஸ்தான வாகனம் மாருதி ஸ்விஃப்ட் என்று. வடிவமைப்பு, விலை, கையாளுமை, மைலேஜ் என அனைத்திலும் தன்னிறைவான மாடல். மேலும், வாடிக்கையாளர்களுக்கு அந்தஸ்தை பெற்றுத் தரக்கூடிய மாருதி கார் மாடல். பராமரிப்பிலும் குறைவான செலவீனம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விற்பனையிலும் சாதித்து வருகிறது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் 50,684 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 53,959 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

மாருதியின் விற்பனையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல். அதிக மைலேஜுடன், பராமரிப்பு குறைவான செடான் கார் என்பதே இதன் மிகப்பெரிய ப்ளஸ். மேலும், வசதிகளிலும், மாருதியின் சேவையும் வாடிக்கையாளர்களை இந்த காரை விட்டு வேறு கார்களை தேர்வு செய்ய தயக்கம் காட்ட வைக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் 55,948 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 61,486 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை அதிகரிப்பதற்கு, கூடுதல் வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன் வந்த டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் ஒரு காரணம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

விலை, பராமரிப்பு செலவு குறைவான கார். சிறப்பான மைலேஜ் என்பதுடன், மாருதி பிராண்டின் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக, இந்த குட்டிக் காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்க செய்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 65,87 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வந்த ரெனோ கார் நிறுவனத்தின் புதிய க்விட் கார் முன்பதிவில் இமாலய எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறது. வரும் காலங்களில் இது நிச்சயமாக மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் ரெனோ க்விட் போட்டியை மாருதி ஆல்ட்டோ கார் சமாளிக்குமா என்பதை தெரிந்துவிடும்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் மூன்றே கார் நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமே, பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. சந்தைக்கு புதிய வரவான ரெனோ க்விட், புதிய ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை நடப்பு மூன்றாவது காலாண்டில் இந்த பட்டியலுக்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

Most Read Articles
English summary
Here is the list of top 10 selling cars during the second quarter of FY 2015- 16.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X