விற்பனையில் 'பெர்ஃபார்மென்ஸ்' காட்டிய டாப் 10 கார்கள்!

Written By:

தழைத்தோங்கி வரும் இந்திய கார் மார்க்கெட்டில் புதிய மாடல்களின் வரவு அதிகரித்து விட்டது. புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட என்று மாதத்திற்கு குறைந்தது 5 கார் மாடல்களாவது மார்க்கெட்டிற்கு வந்துவிடுகின்றன.

அப்படி இருந்தும் சில கார் மாடல்கள்தான் விற்பனையில் தொடர்ந்து ஸ்திரமான எண்ணிக்கையையும், இடத்தையும் பெற்றிருக்கின்றன. அதனை கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன், கடந்த ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் புலப்படுகிறது. அதுபோன்று, கடந்த ஜூனில் விற்பனையில் செயல்திறனை காட்டிய டாப் 10 கார்களின் விபரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஹூண்டாய் இயான்

10. ஹூண்டாய் இயான்

சில இடங்கள் சறுக்கி டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டது ஹூண்டாய் இயான் கார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6,579 இயான் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 5,313 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு அடுத்து, இதன் ரகத்தில் விற்பனையில் இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

09. ஹோண்டா அமேஸ்

09. ஹோண்டா அமேஸ்

போட்டியாளர்கள் சிறிது பங்கிட்டு கொண்டதால், ஹோண்டா அமேஸ் காரின் விற்பனையில் சிறிது சரிவு காணப்பட்டது. கடந்த ஆண்டு ஜூனில் 7,074 அமேஸ் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 6,834 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இருப்பினும், டீசன்ட்டான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து அமேஸ் கார் பெற்று வருகிறது.

08. ஹோண்டா சிட்டி

08. ஹோண்டா சிட்டி

ஹோண்டாவின் கிடுகிடு வளர்ச்சிக்கு காரணகர்த்தாக்களில் ஒன்றாக புதிய சிட்டி செடான் கார் மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 7,723 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 7,187 கார்கள் விற்பனையாகியது. சற்று சரிவை சந்தித்தாலும், ஹோண்டாவின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் இதன் எண்ணிக்கை இல்லை என்பது ஆறுதல்.

 07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

கடந்த மாத டாப் 10 பட்டியலில் செலிரியோ சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதாவது, 40 சதவீதத்திற்கும் மேல் விற்பனை அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோவின் டீசல் மாடல். ஆம், கடந்த ஆண்டு ஜூனில் 4,878 செலிரியோ கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 8,078 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 6வது இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பிடித்தது. கடந்த ஆண்டு ஜூனில் விற்பனையில் இல்லை என்பதால், கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை மட்டும் வழங்கியுள்ளோம். கடந்த மாதத்தில் 8,706 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் 5வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பிடித்தது. கடந்த ஆண்டு 7,901 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 8,970 கார்கள் விர்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் ஹூண்டாய்க்கு பக்கபலமாக இருந்து வரும் மாடல் என்பதை விற்பனை மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

தனது ஆஸ்தான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி வேகன் ஆர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17,119 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 13,221 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. விற்பனை 23 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இருந்தாலும், தனது 4வது இடத்தை விட்டுக்கொடுக்காமல் தாக்கு பிடித்து வருகிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

மூன்றாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16,632 கார்கள் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 17,313 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் வளர்ச்சி பெற்றிருப்பது மாருதிக்கு தெம்பை அளித்துள்ளது.

02. மாருதி ஆல்ட்டோ

02. மாருதி ஆல்ட்டோ

பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்து வந்த மாருதி ஆல்ட்டோ கார் பங்காளியால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் 21,115 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையை ஒப்பிடும்போது, இது 30 சதவீதம் குறைவாகும்.

 01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

கடந்த மாதம் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது மாருதி டிசையர். இந்த காரின் புதிய மாடல் சில மாதங்களுக்கு முன் வந்தது. இந்த நிலையில், புதிய மாடல் தனது அதிகபட்ச விற்பனையை கடந்த ஜூனில் பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15,990 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 21,866 டிசையர் கார்கள் விற்பனையாகி அசத்தியிருக்கிறது.

 
English summary
It's time now to take a look at the top 10 car models that were sold last month, compared to that of the previous year.
Story first published: Thursday, July 9, 2015, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark