செப்டம்பரில் இந்தியாவின் டாப் 10 கார்கள்... வந்த வேகத்தில் வெளியேறிய ஆஸ்பயர்!

Written By:

பண்டிகை கால துவக்கத்தில் கார் விற்பனை எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமான மாதம்தான் செப்டம்பர். ஏனெனில், பண்டிகை காலத்தை குறி வைத்து தொடர்ந்து பல புதிய மாடல்கள் களமிறங்கியதால், போட்டி கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்தநிலையில், முதல் 4 இடங்களில் வழக்கம்போல் மாருதி கார்களே அமர்ந்திருக்கின்றன. கடந்த ஜூலையில் பெரும் ஆர்ப்பாட்டமாக வந்த ஃபோர்டு ஆஸ்பயர் முதல் மாதத்திலேயே டாப் 10 பட்டியலில் அதிரடியாக நுழைந்த வேகத்தில், மறு மாதமே பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனையில் எந்தெந்த கார்கள் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

 10.ஹோண்டா ஜாஸ்

10.ஹோண்டா ஜாஸ்

கடந்த ஆகஸ்ட்டில் 9வது இடத்தில் இருந்த ஹோண்டா ஜாஸ் கார் கடந்த மாதம் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது. புத்தம் புதிய டிசைன், டீசல் எஞ்சின், சிறப்பான வசதிகள் என்று வாடிக்கையாளர்களை வசீகரித்து, டாப் 10 பட்டியலுக்குள் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 4,762 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாதம் இதற்கு நேர் போட்டியாக மாருதி பலேனோ கார் வருவதால், தொடர்ந்து வரும் மாதங்களில் டாப் 10 பட்டியலில் நிலைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

09. ஹோண்டா சிட்டி

09. ஹோண்டா சிட்டி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8வது இடத்தில் இருந்த ஹோண்டா சிட்டி ஒரு இடம் கீழே இறங்கி 9வது இடத்தில் இருந்தது. கடந்த மாதம் 5,702 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அசத்தல் டிசைன், நம்பகமான எஞ்சின்கள் என்று மிட்சைஸ் செக்மென்ட்டில் தொடர்ந்து முத்திரை பதித்த மாடலாக வலம் வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த மாதம் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

 08. ஹோண்டா அமேஸ்

08. ஹோண்டா அமேஸ்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபோர்டு ஆஸ்பயர் வரவால் வெளியேறிய ஹோண்டா அமேஸ், மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது. கடந்த மாதம் 6,577 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. சிறப்பான டிசைன், கேபினில் அதிக இடவசதி, சிறப்பான பூட்ரூம் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த மாத விற்பனை 71 சதவீதம் அதிகரித்துள்ளது.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் வந்த பிறகு ஓர் சிறப்பான விற்பனை வளர்ச்சி தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் இருந்த அதே 7வது இடத்தை செப்டம்பரிலும் தக்க வைத்தது மாருதி செலிரியோ. கடந்த மாதம் 8,901 செலிரியோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, விற்பனை 39 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பட்ஜெட் விலையிலான டீசல் மாடல், ஏஎம்டி பெட்ரோல் மாடல் என்று வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை தந்து தனது விற்பனையில் சீரான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது மாருதி செலிரியோ.

 06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

காம்பேக்ட் செடான் கார்களின் விலை கொண்ட மாடலாக இருந்தாலும், தனது வசீகர தோற்றத்தால் வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வருகிறது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். இதனால், விற்பனை சீராக இருந்து வருகிறது. கடந்த மாதம் 9,729 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, விற்பனை 9 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மிகச்சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்று வருகிறது. வடிவமைப்பு, வசதிகள், சரியான விலையில் கிடைக்கும் நிறைவான ஹேட்ச்பேக் மாடல். பட்ஜெட் மார்க்கெட்டில் ஓர் பிரிமியம் மாடல் என்ற அந்தஸ்துடன் தனது விற்பனையை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 11,258 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

 04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

மிக சரியான பட்ஜெட்டில் சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் கார் மாடல். உயரமானவர்களும் வசதியாக அமர்ந்து செல்வதற்கான குட்டி கார் மாடல் என்பதும், குறைவான பராமரிப்பு போன்ற காரணங்கள் இந்த காரை தொடர்ந்து விற்பனையில் சாதிக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 14,912 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரைவிட விற்பனை 5 சதவீதம் தொய்வு கண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஹேட்ச்பேக் மாடல். தோற்றம், கையாளுமை, குறைந்த பராமரிப்பு போன்ற காரணங்களும், மாருதியின் வலுவான சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் இந்த காரின் விற்பனையை சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. கடந்த மாதம் 18,278 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் எந்த மாடலும் எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மாதம் 19,682 மாருதி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்ட காம்பேக்ட் செடான் கார் என்பதே இதன் மிக பெரிய பலம். கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது விற்பனை 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கூடுதல் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட மாடலுக்கு கிடைத்த பலன் என்று கூறலாம்.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

எத்துனை போட்டி வந்தாலும், மிக உயரமான இடத்தில் அமர்ந்திருக்கிறது மாருதி ஆல்ட்டோ பிராண்டு. குறைவான பட்ஜெட், குறைவான பராமரிப்பு கொண்ட கார் மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம். இதன் ஆல்ட்டோ கே10 மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைப்பதும், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான விஷயமாக இருக்கிறது. கடந்த மாதம் 20,658 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து மாருதியின் விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. சமீபத்தில் வந்த ரெனோ க்விட் கார் மூலமாக இந்த காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுமா அல்லது தனது பிராண்டின் வல்லமையை தொடர்ந்து காட்டுமா என்பதை அடுத்து வரும் மாதங்களின் விற்பனையை வைத்து பார்க்கலாம்.

 
English summary
Here are the top 10 selling cars for September 2015.
Story first published: Tuesday, October 6, 2015, 10:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark