விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார் மாடல்கள்!

Written By:

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி பலேனோ கார் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரிமியம் கார் மார்க்கெட்டின் தலைவனாக இருந்ததோடு, நேர் எதிரியாகவும் விளங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரை விற்பனையில் மாருதி பலேனோ வீழ்த்தியிருக்கிறது. அத்துடன், டாப் 10 கார்களின் பட்டியலிலும் அதிரடியாக நுழைந்துள்ளது மாருதி பலேனோ.

தீபாவளி விற்பனையை மட்டுமின்றி, கடும் சந்தைப்போட்டி நிலவும் இச்சூழலில் முதல் பத்து இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹோண்டா சிட்டி

10. ஹோண்டா சிட்டி

மாருதி சியாஸ் காரின் நெருக்கடியையும் தாண்டி, மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் முதலிடத்தையும், கடந்த மாத விற்பனையின்படி, 10வது இடத்திலும் இருக்கிறது ஹோண்டா சிட்டி கார். அருமையான டிசைன், தரமான பாகங்கள், செயல்திறனும், நம்பகமும் மிக்க எஞ்சின்கள் இந்த காரை உயர்த்திப் பிடித்து வருகிறது. கடந்த மாதம் 6,342 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் 7,252 சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை 13 சதவீதம் குறைந்துவிட்டது.

 09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

கடந்த மாதம் 9வது இடத்தை மாருதி செலிரியோ பிடித்தது. கடந்த மாதம் 6,956 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் 4,956 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது செலிரியோ விற்பனை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலை, ஏஎம்டி கியர்பாக்ஸ், அதிக மைலேஜ், டீசல் மாடல், குறைவான பராமரிப்பு செலவீனம், மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் என பல சாதக அம்சங்களை கொண்டிருப்பதுதான் இந்த காரின் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கையை பெற்று வருகிறது.

08. ஹூண்டாய் இயான்

08. ஹூண்டாய் இயான்

கடந்த மாதம் 8வது இடத்தை ஹூண்டாய் இயான் கார் பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 7,154 இயான் கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்திருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது இயான் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது விற்பனை மூலமாக தெரிகிறது. சிறிய கார் மார்க்கெட்டில் பலரின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.

07. ஹூண்டாய் எலைட் ஐ20

07. ஹூண்டாய் எலைட் ஐ20

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் முதலிடத்தில் இருந்த ஹூண்டாய் எலைட் ஐ20 கார் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது மாருதி பலேனோ கார் முந்தியிருக்கிறது. இருப்பினும், ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஒன்றும் குறைவான விற்பனையை பதியவில்லை. கடந்த மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறது. ஆம், கடந்த மாதம் 8,254 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதன் டிசைனும், வசதிகளும் இந்த காரை தூக்கிப்பிடித்திருக்கிறது.

06. மாருதி பலேனோ

06. மாருதி பலேனோ

கடந்த மாதம் 9,074 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஹூண்டாய் எலைட் ஐ20 காரைவிட சற்று அதிகமான எண்ணிக்கையுடன் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் முதலிடத்தை மாருதி பலேனோ கார் பிடித்திருக்கிறது. அத்துடன், டாப் 10 பட்டியலிலும் 6வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காரை முந்தி விட்டதாக மாருதி சிறிய சந்தோஷமடைந்தாலும், அதற்கு பெரிய அதிர்ச்சியையும் இந்த கார் தந்திருக்கிறது. ஆம், போட்டியாளர்களைவிட தனது பங்காளியான ஸ்விஃப்ட் காரின் விற்பனையை பதம் பார்த்துவிட்டது என்பதே உண்மை.

 05. மாருதி ஸ்விஃப்ட்

05. மாருதி ஸ்விஃப்ட்

நீண்ட காலமாக டாப் 10 பட்டியலில் முதல் மூன்று இடங்களில் அசைக்க முடியாமல் இருந்து வந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையை மாருதி பலேனோ கார் உடைத்துவிட்டது. ஆம், கடந்த ஆண்டு நவம்பரில் 17,900 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 11,859 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரைவிட, கடந்த மாதம் 34 சதவீதம் குறைந்துவிட்டது.

04. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

04. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

முதல் நான்கு இடங்கள் என்பது மாருதி நிறுவனத்தின் கார்களுக்கானதாக இருந்து வந்தது. இந்த நிலையில், மாருதி பலேனோ மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையை பங்கிட்டுக் கொண்டதால், தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நான்காவது இடத்துக்கு முன்னேறிவிட்டது. கடந்த மாதம் 12,899 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் 8,396 கிராண்ட் ஐ10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

நீண்ட காலமாக நான்காவது இடத்தில் இருந்த மாருதி வேகன் ஆர் கார் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. கடந்த மாதம் 13,545 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரைவிட தற்போது 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறைவான பராமரிப்பு, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக இருந்து வருவதே இதன் வெற்றிக்கான ரகசியம்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

மாருதி டிசையர் கார் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் மாறி, மாறி இருந்து வருகிறது. கடந்த மாதம் 18,826 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ் என்ற இரு காரணங்களுடன் மாருதியின் சர்வீஸ் சென்டர் கட்டமைப்பும் இந்த காரின் விற்பனை முதன்மையாக வைத்திருக்கின்றன.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

இந்தியாவின் மிக பிரபலமான குட்டி கார் மாடல். கடந்த மாதமும் முதலிடத்தை பிடித்தது மாருதி ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் 21,995 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் 24,201 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையல், இந்த ஆண்டு விற்பனை 9 சதவீதம் குறைந்துள்ளது. இது ரெனோ க்விட் காரின் தாக்கமாக கூட இருக்கலாம். வரும் காலங்களில் ஆல்ட்டோவுக்கும், க்விட் காருக்குமான போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க சற்று காத்திருக்கலாம்.

 ரெனோ க்விட்

ரெனோ க்விட்

இதுவரை 70,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற ரெனோ க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. நவம்பரில் ரெனோ கார் நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கையாக 7,819 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 144 சதவீத விற்பனை வளர்ச்சியை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முழு காரணம் ரெனோ க்விட் காராக இருக்கும் என்று கூறலாம். அடுத்த மாத விற்பனையில் டாப் 10 பட்டியலில் ரெனோ க்விட் கார் இடம்பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

எமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இரவு 8.30 மணிக்கு படிக்கத் தவறாதீர்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்!

 
English summary
Let's take a look at top 10 selling cars for the month of November 2015.
Story first published: Friday, December 4, 2015, 13:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos