விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கார் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு

Written By:

கார் நிறுவனங்களுக்கு மிக முக்கியமான காலக்கட்டம் நெருங்கி வருகிறது. அதாவது, பண்டிகை காலத்தையொட்டி, புதிய மாடல்களை களமிறக்குவதை புத்திசாலித்தனமான வர்த்தக நோக்காக பல நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.

அதுவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ வேறு வர இருப்பதால், பெரும்பாலான மாடல்கள் பண்டிகை காலத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புத்தம் புதிய கார் மாடல்கள் பற்றிய சிறப்புத் தொகுப்பை இங்கே வழங்குகிறோம். பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது பயனுள்ள தொகுப்பாக அமையும் என்று நம்புகிறோம்.

01. மாருதி எஸ் கிராஸ்

01. மாருதி எஸ் கிராஸ்

பட்ஜெட் கார்களை நம்பி கொண்டிராமல், எதிர்காலத்தை பயமில்லாமல் எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி புத்தம் புதிய செக்மென்ட்டுகளில் கால் பதிக்க உள்ளது. அதில் ஒன்று காம்பேக்ட் எஸ்யூவி. இந்த செக்மென்ட்டில் கொஞ்சம் பிரிமியம் மாடலாக மாருதி நிறுவனம் எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் ரக கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடல் 90 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் மற்றும் 118 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இதுதவிர, பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். ரூ.7.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முறைப்படி விற்பனைக்கு வருகிறது.

02. புதிய ஹோண்டா ஜாஸ்

02. புதிய ஹோண்டா ஜாஸ்

அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் மாடல்களில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மாடல் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார். முதல்முதலாக 1.5 லிட்டர் டீசல் மாடலிலும் வருவதே அதிக எதிர்பார்ப்புக்கு காரணம். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் இடம்பெற்றிருக்கும். டிசைன், இடவசதி, வசதிகள் என அனைத்திலும் பிரிமியம் விரும்பிகளுக்கு விருந்து படைக்க வருகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

03. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச்சிறந்த மாடல் ஒன்றை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று நம்பலாம். தரமான பாகங்கள், வசதிகள் என வழக்கமான ஹூண்டாய் கார்களுக்குண்டான அம்சங்களை இந்த காரிலும் எதிர்பார்க்கலாம். ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா காரில் இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்கள் இதிலும் இடம்பெற்றிருக்கும். அதாவது இரண்டு பெட்ரோல், இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். அடுத்த மாத அறிமுக பட்டியலில் இருக்கிறது.

04. ஃபியட் அபார்த் 595

04. ஃபியட் அபார்த் 595

தனியாக வர்த்தகத்தை துவங்கிவியிருக்கும் இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம் விரைவில் தனது அபார்த் என்ற பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், முதலாவதாக, ஃபியட் அபார்த் 595 மாடல் வர இருக்கிறது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் இருவித ட்யூனிங்கில் வருகிறது. அதாவது, ஒன்று, 135 பிஎச்பி சக்தியையும், மற்றொரு மாடல் 161 பிஎச்பி பவரை அதிகபட்சம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். செயல்திறன் மிக்க இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு அதிபட்சமாக 205 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டிருக்கும். இந்த கார் ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் பிஎம்டபிள்யூவின் மினி பிராண்டு கார்களுடன் போட்டியிடும். இதுதவிர, அவென்ச்சுராவின் டி- ஜெட் மாடலையும், புன்ட்டோ அபார்த் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபியட் நிறுவனம்.

05. ஃபோர்டு ஆஸ்பயர்

05. ஃபோர்டு ஆஸ்பயர்

நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் இந்த கார் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. மாருதி பிரிமியம் ஹேட்ச்பேக் கார்

06. மாருதி பிரிமியம் ஹேட்ச்பேக் கார்

மாருதி நிறுவனம் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் ஒன்றை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் இருந்து வரும் இந்த புதிய கார் இடவசதியிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும். அதேநேரத்தில், இந்த செக்மென்ட்டில் ஆணழகனாக வலம் வரும் ஹூண்டாய் ஐ20 காரின் டிசைனுடன் இந்த காரின் டிசைன் எந்தளவு எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும், மாருதியின் மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இந்த காரை தேர்வு செய்வதற்கான கரணங்களாக அமையும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், டீசல் மாடலில் ஆஸ்தான 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. டாடா கைட்

07. டாடா கைட்

இந்திய கார் மார்க்கெட்டின் பழமையான கார் மாடல்களில் ஒன்றான டாடா இண்டிகா இவி2 காருக்கு மாற்றாக புத்தம் புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. டாடா கைட் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் மாடல் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் தற்போதிருக்கும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருப்பதாக வெளியானத் தகவல்கள் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. ரூ.4.20 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மாடல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

08. செவர்லே ட்ரையல்பிளேசர்

08. செவர்லே ட்ரையல்பிளேசர்

செவர்லே நிறுவனம் புதிய எஸ்யூவி மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. செவர்லே ட்ரையல்பிளேசர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி இடவசதியில் மிக சிறப்பானதாக இருக்கும். தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியை தரும். ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

09. புதிய ஃபோர்டு ஃபிகோ

09. புதிய ஃபோர்டு ஃபிகோ

இந்தியாவின் அழகான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக கூறப்படும், ஃபோர்டு ஃபிகோவுக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடல் விரைவில் வர இருக்கிறது. ஃபோர்டு ஆஸ்பயர் காரில் கொடுக்கப்பட இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. டாடா ஹெக்ஸா

10. டாடா ஹெக்ஸா

டாடா ஆரியா காரில் மாறுதல்களை செய்து புதிய எஸ்யூவி மாடலாக மாற்றியுள்ளனர். மூன்று வரிசையில் தலா இரண்டு இருக்கைகளுடன், மிக தாராள இடவசதி கொண்ட மாடலாக இந்த எஸ்யூவி வகை கார் வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் 154 பிஎச்பி., பவரை அதிகபட்சமாக அளிக்கும் வல்லமை கொண்ட 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் உள்ளது. ரூ.9 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  
English summary
Top 10 Upcoming Cars In India 2015.
Story first published: Friday, June 19, 2015, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark