பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?... மைலேஜில் டாப் 5 கார்கள்!!

Posted By:

கார் வாங்கிய பின்பு, பயணங்களுக்கான எரிபொருள் சிக்கனம் பற்றிய அச்சம் இருக்கக்கூடாது என்பதற்காக, அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை தருகின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக, அதிக மைலேஜ் தரும் கார் மாடல்களை போட்டி போட்டிக்கொண்டு கார் நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன.

அதிகபட்சம் லிட்டருக்கு 25 கிமீ என்ற அளவை ஒட்டியிருந்த மைலேஜ் சராசரி தற்போது லிட்டருக்கு 30 கிமீ என்ற இலக்கை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தற்போது லிட்டருக்கு 26 கிமீ., முதல் 30 கிமீ வரையில் மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 டீசல் கார் மாடல்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

05. ஹோண்டா சிட்டி

05. ஹோண்டா சிட்டி

அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றிருந்தது. ஆனால், தொடர்ந்து போட்டி வலுத்து விட்டதால், தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் மிட்சைஸ் செக்மென்ட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு காரணம், அதிசக்திவாய்ந்த டீசல் மாடலிலும் ஹோண்டா சிட்டி முதல்முறையாக வந்தது மட்டுமின்றி, அந்த டீசல் மாடலின் மைலேஜும் முக்கியமான காரணம். டிசைன், தரம், பிராண்டு மதிப்பை ஆகியவற்றை தாண்டி ஹோண்டா சிட்டி டீசல் காரின் மைலேஜும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

ஹோண்டா சிட்டி தொடர்ச்சி...

ஹோண்டா சிட்டி தொடர்ச்சி...

ஹோண்டா சிட்டி டீசல் காரில் இருக்கும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்ட கார் மாடல் என்பதால், ஹோண்டா சிட்டி மிக பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

04. மாருதி டிசையர்

04. மாருதி டிசையர்

பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்ற, மாருதி டிசையர் மிகவும் வெற்றிகரமான மாடலாக வலம் வருவதற்கு அதன் மைலேஜும் மிக முக்கிய காரணம். மேலும், கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி டிசையர் காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலின் மைலேஜ் அதிகரிக்கப்பட்டு வந்தததும் விற்பனை ஜிவ்வென்று உயர்ந்து நிற்கிறது.

மாருதி டிசையர் தொடர்ச்சி...

மாருதி டிசையர் தொடர்ச்சி...

மாருதி டிசையர் காரில் இருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், லிட்டருக்கு 26.59 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும், மாருதியின் வாக்கை பொய்க்காமல் சிறப்பான மைலேஜை வழங்குவதால், வாடிக்கையாளர்களின் வாரி அணைந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

03. ஹோண்டா ஜாஸ்

03. ஹோண்டா ஜாஸ்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் அசத்தலாக வந்திருக்கிறது. அத்துடன், சிட்டி கார் போன்றே, முதல்முறையாக டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும் இந்த காருக்கு வலு சேர்க்கிறது. இந்த காரின் டீசல் எஞ்சின் மிகச்சிறபப்பான மைலேஜை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆதரவை பெற்றிருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் தொடர்ச்சி...

ஹோண்டா ஜாஸ் தொடர்ச்சி...

ஹோண்டா ஜாஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதும், போட்டியாளர்களைவிட இந்த கார் முன்னிலை பெற உதவியிருக்கிறது.

02. மாருதி செலிரியோ டீசல்

02. மாருதி செலிரியோ டீசல்

டீசல் கார் வாங்க வேண்டும் என்ற பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கனவை கச்சிதமாக பூர்த்தி செய்வதற்காக, மாருதி களமிறக்கியிருக்கும் மாடல்தான் செலிரியோ டீசல். குறைவான விலையில் தினசரி அலுவலகம் மற்றும் வியாபார பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த டீசல் மாடல் என்ற கருத்து காரணமாக, மாருதி செலிரியோ டீசல் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மாருதி செலிரியோ தொடர்ச்சி...

மாருதி செலிரியோ தொடர்ச்சி...

மாருதி செலிரியோ காரில் 2 சிலிண்டர்கள் கொண்ட 793சிசி டீசல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மைலேஜில், இந்தியாவின் இரண்டாவது சிறந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.

01. மாருதி சியாஸ்

01. மாருதி சியாஸ்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி சியாஸ் காரின் டீசல் ஹைபிரிட் மாடல்தான் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஹோண்டா சிட்டி காரை ஓரங்கட்டுவதற்கு வேறு வழி தேடியும் கிடைக்காத நிலையில், சியாஸ் டீசல் மாடலில் சுஸுகியின் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்தை இந்த காரில் பொருத்தி சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சியாஸ் தொடர்ச்சி...

மாருதி சியாஸ் தொடர்ச்சி...

மாருதி சியாஸ் டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையுமம், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். ஏற்கனவே இருந்த சியாஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 26.21 கிமீ மைலேஜ் கொடுத்த நிலையில், தற்போதைய டீசல் ஹைபிரிட் மாடல் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போதைக்கு இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக இருக்கிறது.

 
English summary
Top 5 Most Fuel-Efficient Cars in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark