அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 5 பெட்ரோல் கார்கள்!

Written By:

எரிபொருள் விலையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலால், அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் தருகின்றனர். குறைவான பட்ஜெட் மற்றும் பராமரிப்பு என்பதால் பலரும் பெட்ரோல் கார்களையே தேர்வு செய்கின்றனர்.

அவ்வாறு தேர்வு செய்பவர்களுக்கு வசதியாக, சிறப்பான எரிபொருள் சிக்கனம் வழங்கும் டாப் 5 பெட்ரோல் கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம். முதல்முறை கார் வாங்க செல்வோர் இந்த செய்தித் தொகுப்பின் மூலம் எளிதாக முடிவு செய்ய வாய்ப்பு ஏற்படும்.

05. ஹூண்டாய் இயான்

05. ஹூண்டாய் இயான்

மைலேஜ்: 21.1 கிமீ/லி [814சிசி மாடல்]

இந்த பட்டியலில் 5வது இடத்தில் ஹூண்டாய் இயான் கார் பெற்றிருக்கிறது. ஆனால், ரெனோ க்விட் வந்த பிறகு இந்த பட்டியலில் இருந்து ஹூண்டாய் இயான் விலகிவிடும் புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, அட்ஜெஸ்ட்டபிள் சைடு மிரர்கள், சென்ட்ரல் லாக்கிங், யுஎஸ்பி இணைப்பு வசதிகள் உள்ளன. இயான் கார் மைலேஜிலும் வாடிக்கையாளர்களுக்கு தன்னிறைவு தரும் மாடலாகவே இருந்து வருகிறது.

இயான் தொடர்ச்சி...

இயான் தொடர்ச்சி...

ஹூண்டாய் இயான் கார் இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதில், 814சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜை வழங்குகிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 55 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மற்றொரு 1.0 லிட்டர் கப்பா எஞ்சின் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜை வழங்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரை வழங்க வல்லது. இரு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 215 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது. சென்னையில் ரூ.3.58 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

04. மாருதி ஆல்ட்டோ 800

04. மாருதி ஆல்ட்டோ 800

மைலேஜ்: 22.74 கிமீ/லி

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல். முதல்முறை கார் வாங்குவோர்க்கு நிம்மதியான அனுபவத்தை வழங்கும் மாடலாக கூறலாம். ஏனெனில், மிக குறைவான பட்ஜெட், குறைந்த பராமரிப்பு செலவீனம், அதிக மைலேஜ் போன்றவற்றுடன் மாருதியின் மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காருக்கு கூடுதல் மதிப்பை தருகிறது. ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் போன்ற வசிகளுடன் ஏர்பேக் ஆப்ஷனலாகவும் வழங்கப்படுகிறது.

ஆல்ட்டோ 800 தொடர்ச்சி...

ஆல்ட்டோ 800 தொடர்ச்சி...

மாருதி ஆல்ட்டோ 800 காரில் இருக்கும் 796சிசி எஞ்சின் அதிகபட்சமாக 48 பிஎச்பி பவரை அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த காரில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 177 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது. சென்னையில் ரூ.3.06 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. மாருதி செலிரியோ

03. மாருதி செலிரியோ

மைலேஜ்: 23.1 கிமீ/லி

பட்ஜெட் விலையில் கார் வாங்க பிரியப்படுவர்களுக்கு சிறப்பான சாய்ஸாக மாருதி செலிரியோ வலம் வருகிறது. குறிப்பாக, இதன் ஆட்டோ கியர் ஷிப்ட் மாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், மற்ற பட்ஜெட் கார்களைவிட இடவசதி, கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இருப்பதும் இந்த மாடலுக்கான வரவேற்பை ஸ்திரமாக வைத்திருக்கிறது. ஏசி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஏர்பேக்ஸ், சென்ட்ரல் லாக்கிங், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவையாக கூறலாம்.

செலிரியோ தொடர்ச்சி...

செலிரியோ தொடர்ச்சி...

மாருதி செலிரியோ காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் காண்ட கே10பி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைப்பது இதற்கு கூடுதல் பலம் தரும் விஷயம். இந்த காரில் 35 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்கும், 235 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ரூம் கொண்டது. சென்னையில் ரூ.4.58 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

02. டாடா ஜென்எக்ஸ் நானோ

02. டாடா ஜென்எக்ஸ் நானோ

மைலேஜ்: 23.60 கிமீ/லி

மிக குறைவான பட்ஜெட் விலை கொண்ட கார் மாடல். அடக்கமான வடிவம், அதிக மைலேஜ், குறைவான பட்ஜெட் போன்றவை இந்த காருக்கான சிறப்பம்சங்கள். மேலும், குறைவான பட்ஜெட்டில் இரண்டாவது கார் மாடலை விரும்புவோர்க்கும், பெண் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான மாடல். இப்போது பவர் ஸ்டீயரிங் மாடலிலும் கிடைப்பதும் இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இந்த காரும் ஆட்டோ கியர் ஷிப்ட் கொண்டதாக கிடைப்பதால், குறிப்பாக, நகர்ப்புறத்துக்கு ஏற்ற மாடல். ஏசி வசதியும் உண்டு.

ஜென்எக்ஸ் நானோ தொடர்ச்சி...

ஜென்எக்ஸ் நானோ தொடர்ச்சி...

நானோ ஜென்எக்ஸ் காரில் இருக்கும் 624சிசி எஞ்சின் அதிகபட்சமாக 38 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு ஆட்டோ கியர் ஷிப்ட் மற்றும் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவின் குறைவான விலை கொண்ட ஆட்டோ கியர் ஷிப்ட் மாடல் என்ற பெருமையும் நானோ ஜென்எக்ஸ் மாடலுக்கு உண்டு. ரூ.2.50 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 01. மாருதி ஆல்ட்டோ கே10

01. மாருதி ஆல்ட்டோ கே10

மைலேஜ்: 24.07 கிமீ/லி

மாருதி ஆல்ட்டோ 800 காரின் அடிப்படையில் கொஞ்சம் சக்திவாய்ந்த மாடலாக விற்பனையில் இருக்கிறது. ஆல்ட்டோ 800 காரைவிட வசதிகளிலும் முன்னிலை பெற்றிருப்பதோடு, ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலிலும் கிடைக்கிறது. இதன் சிஎன்ஜி.,யில் இயங்கும் மாடல் லிட்டருக்கு 32.26 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.

மாருதி ஆல்ட்டோ கே10 தொடர்ச்சி...

மாருதி ஆல்ட்டோ கே10 தொடர்ச்சி...

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் இருக்கும் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர் ஷிப்ட் மாடல்களில் கிடைக்கிறது. ரூ.3.74 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

மைலேஜ்: 25.17 கிமீ/லி

விரைவில் வரும் ரெனோ க்விட் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டால், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெறும். மைலேஜில் சிறப்பாக இருப்பதோடு, தோற்றத்திலும், இடவசதியிலும், வசதிகளிலும் குறைவில்லாத மாடலாக வருவதால், மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு போட்டியை தரலாம். ஆனால், இவையெல்லாம், விலை அறிவித்த பிறகே எந்த காருடன் போட்டியிடும் என்று கூற இயலும்.

 ரெனோ க்விட் தொடர்ச்சி...

ரெனோ க்விட் தொடர்ச்சி...

ரெனோ க்விட் காரில் புதிய 800 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரை அளிக்கும். மேலும், 300 லிட்டர் பூட் ரூம் கொண்டதாக வருவதும் குறிப்பிட்டு கூறலாம். ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும்... #டாப் 10 #top 10
English summary
Top 5 Most Fuel Efficient Petrol Cars In India.
Story first published: Monday, September 21, 2015, 9:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark