4வது, 5வது இடத்துக்கு அடிதடி... கீழே உருண்ட டாடா, டவுசர் கழலும் மஹிந்திரா!

By Saravana

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் டாப் 5 கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை இந்திய வாகன உற்பத்தி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டிருக்கிறது.

அதில், முதல் மூன்று இடங்களிலும் எந்த மாறுதல்களும் இல்லை. ஆனால், 4வது மற்றும் 5வது இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த களேபரத்தில் டாடா மோட்டார்ஸ் கீழே உருண்டது. ஹோண்டாவின் அசுர வேக வளர்ச்சி மஹிந்திராவின் டவுசரை கழற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 05. டொயோட்டா

05. டொயோட்டா

கடந்த நிதி ஆண்டில் டொயோட்டா கார் நிறுவனம் 5வது இடத்தை பிடித்தது. கடந்த 2013- 14ம் நிதி ஆண்டில் 1,28,811 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தில் இருந்த டொயோட்டா ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்தது.

04. ஹோண்டா கார்ஸ்

04. ஹோண்டா கார்ஸ்

கடந்த நிதி ஆண்டில் 4வது இடத்தை ஹோண்டா கார் நிறுவனம் பெற்றது. 2013- 14ம் நிதி ஆண்டில் 1,34,347 கார்களை விற்பனை செய்து 5வது இடத்தில் இருந்த ஹோண்டா கார் நிறுவனம் ஒரு படி முன்னேறி, 4வது இடத்தை பெற்றிருக்கிறது. பெட்ரோல் கார்களில் புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனம் வாடிக்கையாளர்களின் நாடியை பிடித்து பார்த்து டீசல் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்ததும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 1,89,062 கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஹோண்டாவின் அசுர வேக வளர்ச்சி மஹிந்திரா டவுசர் கழலும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

03. மஹிந்திரா

03. மஹிந்திரா

டாப் 5 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே உள்நாட்டு நிறுவனம் மஹிந்திரா மட்டுமே. மேலும், தனது மூன்றாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், 2013- 14 நிதி ஆண்டு காலக்கட்டத்தில் 2,29,155 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 2,01,129 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. மேலும், ஹோண்டாவின் அசுர வளர்ச்சி மஹிந்திராவின் டவுசரை இந்த ஆண்டு கழற்றும் அபாயமும் உள்ளது. எனவே, சுதாரித்துக் கொண்டு பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது.

 02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை ஹூண்டாய் மோட்டார்ஸ் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த 2013-14 நிதி ஆண்டில் 3,80,253 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் மோட்டார்ஸ், கடந்த நிதி ஆண்டில் 4,20,668 கார்களை விற்பனை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. புளூயிடிக் டிசைனில் வெளியிடப்படும் ஹூண்டாய் கார்கள் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

இந்தியாவின் மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி பிற நிறுவனங்களால் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது. கடந்த 2013- 14 நிதி ஆண்டில் 10,53,689 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கார் நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் 11,70,702 கார்களை விற்பனை செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் கார் விற்பனை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

கீழே உருண்ட டாடா

கீழே உருண்ட டாடா

கடந்த 2014-15 நிதி ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ், கடந்த நிதி ஆண்டில் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் 1,34,080 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது. இதற்கடுத்து, ஏழாவது இடத்தில் ஃபோர்டு கார் நிறுவனம் உள்ளது.

Most Read Articles
English summary
Top five Indian Car Manufacturers List.
Story first published: Thursday, June 25, 2015, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X