டொயோட்டா கேம்ரி காரின் ஹைபிரிட் மாடலுக்கு எக்கச்சக்க வரவேற்பு!

Written By:

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா கேம்ரி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, டொயோட்டா கேம்ரி காரின் ஹைபிரிட் மாடலுக்கு சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையுடைய தொழில்நுட்பத்தில் வரும் இந்த காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இந்திய வாகன மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பும், விழிப்புணர்வும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டொயோட்டா பெருமிதம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

கடந்த 2013ம் ஆண்டு டொயோட்டா கேம்ரியின் ஹைபிரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் முதல் ஹைபிரிட் கார் என்ற பெருமையும் கிடைத்தது. அப்போதிலிருந்தே, டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் கேம்ரி ஹைபிரிட் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

முன்பதிவு அமோகம்

முன்பதிவு அமோகம்

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா கேம்ரி கார் இதுவரை 280 முன்பதிவுகளை பெற்றிருக்கிறுது. கடந்த ஆண்டு முழுவதும் 720 கேம்ரி கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் 280 கார்களுக்கு முன்பதிவு கிடைத்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்ட விசாரணைகள் வந்துள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

அரசு மானியம்

அரசு மானியம்

முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் கேம்ரி கார்களில் 80 சதவீதம் அளவுக்கு ஹைபிரிட் மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், ஹைபிரிட் மாடலுக்கு ரூ.70,000 வரை மத்திய அரசு மானியம் வழங்குவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. முதல் நிலை நகரங்களைவிட தற்போது கோயம்புத்தூர், புனே, அகமதாபாத் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

டொயோட்டா கேம்ரி காரில் டொயோட்டா ஹைபிரிட் சினர்ஜி டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தப்டுகிறது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், மின் மோட்டாரும் இணைந்து சக்தியை வழங்குகிறது. இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 205 பிஎஸ் பவரையும், 405 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. இந்த காரின் ஹைபிரிட் மாடலில் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்ட சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக டார்க்கை வழங்கும் மின் மோட்டார் இணைந்து செயலாற்றும் இந்த கார் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 19.16 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோமீட்டருக்கு 122.8 கிராம் கார்பனை வெளியேற்றும் தன்மை கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 விலை விபரம்

விலை விபரம்

இந்த புதிய டொயோட்டா கேம்ரி காரின் பெட்ரோல் மாடல் ரூ.28.8 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், கேம்ரி ஹைபிரிட் மாடல் ரூ.31.92 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்கள் பெங்களூரில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

 
English summary
Toyota's recent all new Camry Hybrid, that was launched in May has been very well received across the Indian market. The newly launched Camry has already sold more than 280 units in a matter of 50 days as compared to 720 units sold in the whole of 2014.
Story first published: Tuesday, June 23, 2015, 10:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark